திருமணத்திற்கு முன்பே இருவரை காதலித்த ஐஸ்வர்யா… அதில் தற்கொலை செய்த ஒருவர் யார் தெரியுமா.? தனுஷ் எத்தனாவது தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர் நடிகர் தனுஷ் இருவரும் ஒரு மனதாக பிரிவதாக கடந்த ஜனவரி 17ம் தேதி அறிவித்து, தங்களது 18 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொள்வதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், பலர் இவர்களை மீண்டும் இணைத்து வைப்பதில் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர், அதற்க்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறபடுகிறது.

மாணவனாக பள்ளியில் படித்து கொண்டிருந்த போதே தந்தையின் இயக்கத்தில் நடிகராக அறிமுகமான தனுஷ் தொடர்ந்து மூன்று படங்களில் வெற்றி பெற்று குறுகிய காலத்தில் சிறு வயதிலே முன்னணி நடிகர் வரிசையில் இடம்பெற்று தனது 21 வயதில் தன்னை விட இரண்டு வயது மூத்தவரான ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைக்கு தந்தையானார் நடிகர் தனுஷ்.

இந்நிலையில் தனுஷ் திருமணத்துக்கு முன்பும், திருமணத்துக்கு பின்பும் மனைவி ஐஸ்வர்யாவை தவிர வேறு எந்த ஒரு பெண்ணுடனும் கிசு கிசுவில் சிக்காமல் வந்த தனுஷ், ஆடுகளம் படத்திற்கு பின்பு தான் நடிகைகளுடன் தொடர் கிசு கிசுவில் சிக்கி அதில் பல திருமணம் முடிந்த நடிகைகளுக்கு விவாகரத்தும் பெறுவதற்கு தனுஷ் தான் காரணம் என கூறப்பட்டது. ஆனால் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா திருமணத்துக்கு முன்பே காதல் கிசு கிசுவில் சிக்கியவர்.

இதில் திருமணத்துக்கு முன்பு இருவரை உயிருக்கு உயிராக ஐஸ்வர்யா காதலித்ததாக கூறப்படும் நிலையில். அதில் நடிகர் சிம்புவை ஐஸ்வர்யா காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இவர்கள் இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சண்டையிட்டு பிரிந்தனர். ஆனால் சிம்புவின் காதலுக்கு முன்பு ஒருவரை ஐஸ்வர்யா உயிருக்கு உயிராக காதலித்ததும் தெரிய வந்துள்ளது.

அதில் தொழில் அதிபர் மகன் ஒருவரை மிக தீவிரமாக காதலித்து வந்துள்ளார் ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் இந்த காதலை முறித்து கொள்ள முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா, ஆனால் உயிருக்கு உயிராக ஐஸ்வர்யாவை காதலித்த தொழிலதிபர் மகன் காதலியின் பிரிவை தாங்க முடியமால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை தற்போது சினிமா பிரபலம் ஒருவர் மேலோட்டமாக யூ டுயூப்பில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்.

ஏற்கனவே நடிகர் சிம்பு மற்றும் தொழில் அதிபர் மகன் ஒருவருடன் காதல் கிசு கிசுவில் சிக்கிய ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா அதன் பின்பு மூன்றாவதாக தான் தனுஷை காதலித்து திருமணம் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில். தற்போது தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு முக்கிய காரணமாக ஐஸ்வர்யா தான் என கூறப்படும் நிலையில், தனது இளம் வயதில் ஐஸ்வர்யாவுக்கு ஏற்பட்ட காதல் பிரிவுக்கும் அவரின் தனிப்பட்ட முடிவு தான் என்றும், ஆனால் அவரை உயிருக்கு உயிராக காதலித்த யாரும் அவரை விட்டு பிரிய மனமில்லாமல் தான் இருந்தனர் என்று கூறப்படுகிறது.