கமல்ஹாசன் வாங்கிய பலத்த அடி… தெறித்து பின் வாங்கிய ரஜினிகாந்த்..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நான் அரசியலுக்கு வருவது உறுதி, இது காலத்தின் கட்டாயம், இப்ப இல்லை என்றால் எப்போதும் இல்லை. நான் எல்லாம் பண்ணிட்டேன். இனி அம்பு விடுறதுதான் பாக்கி. வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன் என கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி அரசியல் அறிவிப்பை வெளியிட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ரஜினிகாந்த்.

மேலும், அரசியல் ரொம்ப கெட்டுப்போய்விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுப் போய்விட்டது. தமிழகத்தில் நடந்த சில அரசியல் சம்பவங்கள் ஒவ்வொரு தமிழனையும் தலைகுனிய வைத்துவிட்டது. ஒவ்வொரு மாநில மக்களும் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். இந்த நேரத்தில் முடிவெடுக்கவில்லையென்றால் எனக்கு வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சி இருக்கும் என சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்பது போன்று சும்மா இருந்த ரசிகர்களை உசுப்பேத்தி விட்டார் ரஜினிகாந்த்.

2017ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், புதிய கட்சி எப்போது தொடங்குவர், கட்சியின் பெயர் என்ன.? யாருடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவார், முதல்வர் வேட்பாளர் யார் என ஒரு பக்கம் தமிழக அரசியலில் பரபரப்பாக விவாதம் நடைபெற்று கொண்டிருக்க, மறுப்பக்கம் ரஜினிகாந்த் நடிப்பில், காலா, எந்திரன் 2.0, பேட்ட , தர்பார் என ஒவ்வொரு படமாக வெளிவந்து கொண்டிருந்ததே தவிர புதிய அரசியல் கட்சி குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

இருந்தும், தலைவர் புதிய கட்சியை தொடங்கிவிடுவார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்க சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருந்த நிலையில் கொரோனவை காரணம் காட்டி புதிய அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்து அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, ரஜினி அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த தமிழக மக்களையும் ஏமாற்றினார் ரஜினிகாந்த்.

ரஜினியின் அரசியல் கட்சி தொடங்காமல் பின்வாங்கியதற்கு முக்கிய காரணம் நடிகர் கமல்ஹாசன் தான் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசன் புதியதாக அரசியல் கட்சி தொடங்கி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பொது, கமல்ஹாசன் 10 சதவீகிதம் வாக்கு வாங்குவர், அப்படி அவர் வாங்கினால் நாம் புதிய அரசியல் கட்சி தொடங்கினால் நமக்கு 15 முதல் 20 சதவீகிதம் வாக்கு கிடைக்கும் என திட்டமிட்டிருந்துள்ளார் ரஜினிகாந்த்.

ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 5 சதவீகிதத்துக்கு மிக குறைவான வாக்குகள் மட்டுமே வாங்கி பலத்த அடி வாங்கியிருந்தார் கமல்ஹாசன், அதுவும் தமிழகத்தில் பல இடங்களில் 1 சதவீதம் வாக்குகள் வாங்கியிருந்தார் கமல்ஹாசன், இதனால் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கினால் அதிகபட்சம் 5 முதல் 7 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என தகவலை அறிந்த ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி தொடங்குவதை கைவிட்டுட்டு பின் வாங்கியதாக கூறப்படுகிறது.

பாஜக பக்கம் சாயும் விஜய்….தப்பிக்க வேறு வழியில்லை..! விஜய் மாற்றத்தின் பின்னணியில் நடந்து என்ன.?