நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் பிரபலம் அடைவதர்க்கு முன்பே, அவர் நடித்த முதல் படம் அப்பூர்வ ரகங்களை படம் வெளியான பொது, முதல் ரசிகர்மன்றம் மதுரையில் தொடங்கியவர் முத்துமணி. இவர் சமீபத்தில் உடல்நல குறைவினால் உயிர் இழந்தார். இது குறித்து பிரபல சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் மிக கடுமையாக நடிகர் ரஜினிகாந்த் மீது குற்றசாட்டு வைத்திருந்தார் அவர் பேசியதாவது.
நடிகர் ரஜினிகாந்த் அவரது ரசிகர்களை தொடர்ந்து அவமதித்து வருவதாகவும், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் திருமணத்துக்கு செல்ல ரஜினிகாந்துக்கு நேரம் இருக்கிறது. ஆனால் ரஜினி முதல் ரசிகர் மன்றம் தொடங்கிய அவரது ரசிகர் இறப்புக்கு வருவதற்கு நேரம் இல்லை என்றும். மறைந்த ரஜினி ரசிகர் முத்துமணி வசதியாக இருந்தவர், அவரின் சொந்த பணத்தை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் மூலம் நற்பணிகளை செய்து வந்தவர்.
ஒரு கட்டத்தில் வருமானமின்றி வறுமையில் தவித்து வந்த முத்துமணி கஷ்டத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் சிலர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து உதவி கேட்க முயற்சித்ததாகவும், ஆனால் லதா ரஜினிகாந்த் யாரும் உதவி கேட்டு வந்தால் அவர்களை ரஜினிகாந்திடம் நெருங்க விடமாட்டார் என்பதை உணர்ந்து அவர்கள் ரஜினிகாந்தை நேரில் சந்திப்பதை தவிர்த்து விட்டதாக கடுமையாக குற்றசாட்டுகளை முன் வைத்த அந்த சினிமா பிரபலம்.
மேலும் ரசிகர் முத்துமணி இறந்ததற்கு, ஒரு ஆறுதல் அறிக்கை கூட விடவில்லை, டிவீட்டர் பக்கத்தில் அனுதாபம் கூட ரஜினிகாந்த் தெரிவிக்கவில்லை, இதனால் மனம் உளைச்சலில் இருக்கும் அவரது ரசிகர்கள் நிழலை நிஜம் என்று நம்பிவிட்டோம், ரஜினிகாந்த் ஒரு பொய் மான் என்றும் அவரது ரசிகர்கள் வேதனையில் இருப்பதாக தெரிவித்த அந்த சினிமா பிரபலம். மேலும் பல ரஜினி ரசிகர்கள் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு.
இதற்கு முன்பு ரஜினியை விமர்சனம் செய்ததற்காக உங்களை கடுமையாக தீட்டினோம், ஆனால் தற்போது தான் எங்களுக்கே புரிகிறது என வருத்தப்பட்டு ரஜினி ரசிகர்கள் பேசியதாக அந்த சினிமா பிரபலம் தெரிவித்தார். சமீபத்தில் ரஜினி மூத்த மகள் ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் ஒன்றை தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டு ப்ரோமோஷன் செய்த ரஜினிகாந்த். மேலும் அவரது இரண்டாவது மகள் சௌந்தர்யா புதியதாக தொடக்கியுள்ள செயலி ஒன்றை.
தனது டிவீட்டர் பக்கத்தில் ப்ரோமோஷன் செய்து வந்த ரஜினிகாந்த், தனக்காக முதல் ரசிகர் மன்றம் தொடங்கிய மதுரையை சேர்ந்த முத்துமணி மறைவுக்கு நேரில் செல்லவில்லை என்றாலும், டிவீட்டரில் ஒரு இரங்கல் தெரிவித்திருக்கலாம் என்கிற விமர்சனம் கடுமையாக எழுந்த பின்பு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் சொன்ன ஆடியோ ஓன்று சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடதக்கது.