எந்த போட்டியும் இல்லாமல் சோலோ ரிலீஸ் ஆகும் வலிமை!

0
Follow on Google News

வலிமை படத்தோடு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் உள்ளது. இந்த படம் தீபாவளிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று படக்குழுவினர் பிப்ரவரி மாதம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர். இந்நிலையில் வேறு பெரிய படங்கள் போட்டிக்கு இல்லாமல் சோலோ ரிலிஸாக வருகிறது வலிமை.

ஆனால் பேன் இந்தியா படங்களான ராதே ஷ்யாம் மற்றும் ஆர் ஆர் ஆர் ஆகிய படங்கள் கனிசமான திரைகளை பங்கு போட்டுக்கொள்ளும் என்பதால் அண்ணாத்த போல மொத்தமாக திரைகளைக் கபளிகரம் செய்யமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ அஜித் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் வலிமையான பொங்கலாக அமையப் போகிறது.