இயக்குனர் தேசிங் பெரியசாமி ரஜினிக்காக ஆசை ஆசையாக ஒரு கதையை உருவாக்கினார். ஆனால் அந்த படம் நடக்காமல் போய்விட்டது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் தேசிங் பெரியசாமி முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அந்த படத்தை லாக்டவுனில் பார்த்து பிடித்துப்போன ரஜினிகாந்த் இயக்குனர் போன் செய்து பாராட்டினார். அதோடு இல்லாமல் தனக்கும் ஏதாவது கதை இருந்தால் சொல்ல சொல்லி கேட்டிருந்தார்.
இதையடுத்து ஒரு ஆண்டுக்கும் மேலாக கடினமாக உழைத்து தேசிங் ரஜினிக்காக கதையை உருவாக்கினார்.
ஆனால் படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக இருப்பதாகவும், வரலாற்று சம்மந்தப்பட்ட காட்சிகள் இருப்பதாலும் ரஜினி அதை தவிர்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது தேசிங் பெரியசாமி நடிகர் சிவகார்த்திகேயனை இயக்குவதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.