பிட்ச் பராமரிப்பாளர்களைப் பாராட்டும் விதமாக டிராவிட் செய்த செயல்!

0

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கான்பூர் மைதான பராமரிப்பாளர்களுக்கு 35000 ரூபாய் பரிசாக வழங்கியுள்ளார். கான்பூர் டெஸ்ட் மைதானம் ஐந்தாம் நாள் இறுதிவரை பரபரப்பாக சென்று டிராவில் முடிந்தது.

இந்த மைதானம் டெஸ்ட் போட்டிக்கு ஏற்றார்போல சிறப்பாக பராமரிக்கப்பட்டுள்ளதாக பாராட்டிய இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பராமரிப்பாளர்களுக்கு சுமார் 35000 ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளார். மைதானத்தை கிரிக்கெட் ஸ்பிரிட்டுக்கு ஏற்ற மாதிரி அமைத்துள்ளதாகவும் ஊழியர்களை பாராட்டியுள்ளார்.

கான்பூர் மைதானம் முதல் மூன்று நாட்கள் வேகப்பந்துக்கு சாதகமாக அமைந்தது. அதன் பின் படிப்படியாக மாறி ஐந்தாம் நாளில் இந்திய சுழலர்கள் மாயஜாலங்கள் செய்யும் விதமாக அமைந்தது. போதிய வெளிச்சமின்மைக் காரணமாக போட்டி கொஞ்சம் சீக்கிரமாகவே முடிந்தது இந்தியாவின் வெற்றியை தட்டிப் பறித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here