முத்து கண்ணில் பட்ட சரக்கு… சுருதி விசேஷத்தில் நடந்த ரகளை… பரபரப்பில் சிறகடிக்க ஆசை

0
Follow on Google News

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில், ஸ்ருதிக்கும், ரோகிணிக்கும், ஒரே நாளில் தாலி பிரித்து கோர்க்க ஏற்பாடுகள் நடந்துள்ளது. ஆனால் ரோகிணி தன்னை பற்றிய உண்மை வெளியே வந்து விட கூடாது என்பதில் குறியாக இருப்பதால், முத்துவை குடிக்க வைத்து ஏதேனும் பிரச்சனையை வெடிக்க வைக்க வேண்டும் என திட்டம் போடுகிறார்.

அதைப்போல் ஸ்ருதியின் அப்பா – அம்மாவும் ஏதாவது பிரச்சனையை இந்த பங்க்ஷனில் உண்டு பண்ணி, தன்னுடைய மகள் – மருமகனை தங்களுடைய வீட்டிற்கு அழைத்து சென்று விட வேண்டும் என திட்டம் போடுகின்றனர். அதே நேரம், மீனா… முத்துவால் எந்த ஒரு பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்.

ஸ்ருதியின் அம்மா ஏற்பாடு செய்த நபர் முத்துவை வேண்டுமென்றே முதுகில் பலமாக அடிக்கிறார். ஃப்ரண்ட் என நினைத்து அடித்ததாகக் கூறுவதுடன் முத்துவிடம் திமிராக பேசுகிறார். மீனா கோபப்படுகிறார், ஆனால் முத்து மீனாவை கண்ட்ரோல் செய்து கூட்டிச் செல்கிறார். பரவாயில்ல, ”உங்களுக்கு ஸ்ருதி ரோகினி மேல அக்கறை எல்லாம் இருக்கே” என்கிறார் மீனா.

”அதெல்லாம் இல்ல அப்பாவுக்காக தான் அமைதியா இருக்கேன்’ என்கிறார் முத்து. விஜயா கூப்பிடுவதால் மீனா முத்துவை மட்டும் தனியே விட்டுச் செல்கிறார். அங்கு ரோகிணி ஏற்பாடு செய்த நபர் வருகிறார். அவர் வந்து முத்துவிடம் பேச்சுக் கொடுக்கிறார். ஸ்ருதி அப்பாவின் நண்பர் அண்ணாமலையை ஒழுக்கமானவர் எனக் கூறி பாராட்டுகிறார்.

பின் ஸ்ருதியின் அப்பாவை பார்த்து, ”வாசுதேவன் இவரு பையனுக்கு தானே உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுத்து இருக்கீங்க. வசதி வித்தியாசம் எதுவுமே பார்க்காம இவரு பையனுக்கு உங்க பொண்ணை குடுத்து இருக்கீங்க. ரியலி கிரேட்” என்கிறார். ”ஆமா சார், எல்லாம் நம்ம முடிவு பண்ற மாதிரி நடக்குறது இல்லை சார். சில நேரம் எங்கேயோ இருக்குறது திடீர்னு கோபுரத்துக்கு போறது இல்லையா? சில பேருக்கு அப்படி ஒரு வாழ்க்கை அமையுது” என ஸ்ருதியின் அப்பா சொல்கிறார்.

”திமிர பார்த்தியா அண்ணாமலை எப்படி ஜாடையா பேசிட்டு போறான்” என பரசு சொல்கிறார். ”இவன் பெரிய கோபுரம், நம்ம குப்பை மேடுனு சொல்லிட்டு போறான். நான் தான் சொன்னேனே, இவனை திருத்தவே முடியாது” என்கிறார் அண்ணாமலை. ”இந்த ரோகினியோட அப்பாவை இன்னும் காணும் எவ்ளோ நேரம் ஆகுது பாரு” என்கிறார் விஜயா. ”இந்நேரம் அவரு நம்ம ஊருக்கு வந்து இருப்பாருனு நெனைக்குறேன்” என்கிறார் பார்வதி.

ஸ்ருதியின் அம்மா வந்து ’சம்மந்தி டைம் ஆகுது பாருங்க, ரோகினி ரெடி ஆகிட்டாளா? கூப்பிட்டு உட்கார வையுங்க’ என்கிறார். ”ரெடி ஆகிட்டு இருக்காங்க” என்கிறார் பார்வதி. ”பிரச்னை நடக்குறதுக்குள்ள பங்ஷனை முடிச்சிடலாம் இல்ல” என்கிறார் அவர். ”என்ன பிரச்னை வரப்போகுது” எனக் கேட்கிறார் விஜயா. ஸ்ருதியின் அம்மா எதையோ சொல்லி சமாளிக்கின்றார்.

முதலில் ஸ்ருதிக்கு பங்ஷன் பண்ணிடலாம் என விஜயா சொல்கிறார். உடனே மனோஜ் ”ரோகிணிக்கு தானேம்மா முதல் ரைட்ஸ்” என்கிறார் மனோஜ். ”அவளுக்கு பண்ணாம ஸ்ருதிக்கு பண்ணா அப்போ எல்லோரும் என்ன நினைப்பாங்க” என்கிறார் மனோஜ். மனோஜ் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் விஜயா முதலில் ஸ்ருதிக்கு பங்ஷன் பண்ணிடலாம் என்கிறார். இப்படி விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசையில்.

இந்த பங்க்சனின் முத்து எந்த பிரச்சனையும் செய்ய வில்லை என்றால், நிச்சயம் ரோகினி வசமாக சிக்கி கொள்வர், ஆனால் ரோகினி செட் செய்த அந்த நபர் முத்துவிடம் பேசி ஒரு வழியாக சரக்கு பாட்டிலை கண்ணில் காண்பிக்கிறார். இதற்கு பிறகு முத்து சரக்கு அடித்து பங்க்சனின் ரகளை செய்தால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போன்று ரோகினி போட்ட திட்டமும் நிறைவேறி விடும், சுருதி அம்மா போட்ட திட்டமும் நிறைவேறி விடும். ஆனால் சரக்கு பாட்டிலை கண்ணால் பார்த்த முத்து சரக்கு அடிப்பாரா.? மாட்டாரா.? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்…