போலீஸ் ஸ்டேஷனில் சத்யாவை காப்பாற்ற அங்கிருந்த போலீஸ் அதிகாரி முத்துவிடம், தனக்கு தெரிந்த ஒரு வக்கீலை பார்க்க சொல்லுகிறார். முத்துவும் அந்த வக்கீலை சென்று பார்க்கிறார். அதற்கு அந்த வக்கீல் இதில் சத்யாவை காப்பாற்ற வேண்டுமானால் அதற்கு ஒரே வழி உங்கள் அம்மா தான். இது எங்கள் குடும்ப பிரச்சினை எங்களுக்குள் நாங்கள் பேசி தீர்த்துக் கொள்கிறோம், எங்களுடைய குடும்ப பிரச்சினை காரணமாக சத்தியா இப்படி செய்து விட்டார் என்று காவல் நிலையத்தில் எழுதிக் கொடுக்க வேண்டும்.
அப்படி கொடுத்தால் மட்டுமே சத்யாவை காப்பாற்ற முடியும் என்று வக்கீல் தெரிவிக்கிறார். இதனை தொடர்ந்து உடனே முத்து நேரடியாக அவருடைய அப்பாவை போய் வீட்டில் பார்க்கிறார். அப்போது அப்பா, சத்யா ரொம்ப திருந்திட்டான். அவன் பாவம், அம்மாக்கு இப்ப என்ன.? மீனா வீட்ல இருக்க கூடாது, அதான பரவாயில்லப்பா, மீனா வீட்டை விட்டு வெளியேறிய அவங்க அம்மா வீட்டுக்கு போகட்டும். நான் உங்க கூட இருக்கேன் பா.
நான் இங்கேயே இருக்கேன், சத்யா காப்பாற்ற பட வேண்டும் என்றால் அது இப்போதைக்கு அம்மா அதை கையில தான் இருக்கு, என்று தன்னுடைய தந்தையை கன்வென்ஸ் செய்துவிட்டு விஜயாவை பார்க்க பார்வதி வீட்டிற்கு முத்து செல்கிறார். அங்கே விஜயா இவன் எதற்கு இங்கே வந்தான் என்று கோபப்பட. அதற்கு முத்து அம்மா அது உங்க வீடு, அங்க வாமா என்று கூப்பிட, நான் வரமாட்டேன், அந்த பூ காரி இருக்கும் வீட்டிற்கு நான் வரவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.
அதற்கு முத்து, அம்மா அது உங்க வீடு, நீ அங்க வாங்க, மீனாவ நான் வீட்டை விட்டு போகச் சொல்கிறேன். ஆனா நான் வீட்டை விட்டு போக மாட்டேன். ஏனென்றால் அப்பாவ நான் பாத்துக்கணும். இரண்டாவது நான் வீட்டை விட்டு போனா அப்பாவும் என் கூட வர்றேன்னு சொல்லுவாரு, எப்படிம்மா உனக்கு வசதி.? நான் அப்பா மீனா மூன்று பேரும் வீட்டை விட்டு வெளியேற வா.? இல்லை மீனாவை மட்டும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, நானும் அப்பாவை மட்டும் அங்கே இருக்கவா.?
நீயே சொல்லுமா.? என்று முத்து விஜயாவிடம் கேட்க, அதற்கு பரவால்ல நீ இருந்துக்க, அந்த பூக்காரி வீட்டை விட்டு வெளியே போனும், எனக்கு அவ்வளவுதான் என்று சொன்னதும், சரி வாம்மா வீட்டுக்கு போகலாம் என்று விஜயாவை வீட்டிற்கு அழைத்து செல்கிறார் முத்து, அங்கே குடும்பத்தில் அனைவரும் இருக்க, இந்த பூக்காரியை வீட்டை விட்டு வெளியே போகச் சொல் என்று முத்துவிடம் விஜயா சொல்கிறார்.
அதற்கு முத்து. அம்மா ஒரு கண்டிஷன் நீ போலீஸ் ஸ்டேஷன் சென்று இது எங்க குடும்ப பிரச்சனை, அதனால சத்யா இப்படி பண்ணிட்டார், எங்க குடும்பத்துக்குள் நாங்கள் பேசி தீர்த்துக் கொண்டோம், வேற ஒன்னும் பிரச்சனை இல்ல என்று காவல் நிலையத்தில் சத்யா மீது எந்த நடவடிக்கும் எடுக்க வேண்டாம் என எழுதிக் கொடுத்தால் மட்டுமே, மீனா வீட்டை விட்டு வெளியே போவா என்று முத்து சொன்னதும்.
நமக்குத் தேவை என்ன இந்த பூக்காரியை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும், ரொம்ப நாளா ஆசை நிறைவேற போது அவ்வளவுதான், அப்படின்னு சரி நான் போலீஸ் ஸ்டேஷன்ல எழுதி கொடுக்கிறேன் என்று விஜயா சொல்ல, உடனே வீட்டை விட்டு மீனா நீ கிளம்பு என்று சொல்கிறார் முத்து. மீனாவும் வீட்டை விட்டு வெளியேறி அவங்க அம்மா வீட்டுக்கு செல்கிறார். இதனை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்று விஜயா இது எங்கள் குடும்ப பிரச்சனை எங்களுக்குள் பேசி முடித்துக் கொண்டோம் சத்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று எழுதி கொடுக்கிறார்.
இதன் பின்பு அங்கே காவல் நிலையத்தில் இருக்கும் மீனாவின் அம்மா விடுவிக்கப்படுகிறார், மேலும் சத்யா இந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றப்படுகிறார். இதன் பின்பு தான் பிரச்சனையே ஸ்டார்ட் ஆகுது. என்னுடைய போனை திருடியது யார்.? போனில் இருந்த வீடியோவை வெளியிட்டது யார்.? என்கின்ற தேடுதல் வேட்டையை தொடங்குகிறார் முத்து. இதனால் வசமாக சிக்கி சின்னாபின்னமாக போகிறார் ரோகினி. இதன் பின்பு தான் சிறகடிக்க ஆசை சீரியலில் மிகப்பெரிய ட்விஸ்ட் இருக்கிறது.