சந்தானம் நடிப்பில் வெளிவந்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தை தயாரித்த நிறுவனம் லார்க் ஸ்டுடியோஸ். இந்த நிறுவனம் தற்போது மிர்ச்சி சிவாவை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்கவிருக்கிறது. அந்த படத்திற்கு ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்று தலைப்பிட்டுள்ளனர்.
இப்படத்தை விக்னேஷ் ஷா என்பவர் இயக்குகிறார். லியோன் ஜேம்ஸ் இசைமைக்கியார். ஆர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது. இதில், மிர்ச்சி சிவா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இப்படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக ஆகாஷ் மேகா நடிக்கவுள்ளார். மேலும், அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த் உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சாண்டி மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.
லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஏற்கெனவே தயாரித்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ படம் லாக் டவுன் சமயத்தில் வெளியானாலும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில், இந்த படமும் ரசிகர்களை கவரும் விதமாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.