ஏன்டா நாயே, பொய் சொல்லி ஏமாத்துனதால ஒரு உயிர் போச்சு..! அநாகரிகமாக பேசி செமத்தியா வாங்கிய நடிகர் சித்தார்த்..!

0
Follow on Google News

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது. பாஜக ஆளும் உத்திரபிரதேசம் பற்றி தொடர்ந்து ஆதாரமற்ற செய்திகள் சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டு வந்தது. இதற்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அப்போது தெரிவித்ததாவது, உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை என்று தவறான தகவல்களை தரும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பொய் சொன்னால் அறை விழும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு நடிகர் சித்தார்த் பதிலளித்து பெரும் சர்ச்சையில் சிக்கியிருந்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சாமானியனாக இருந்தாலும் சரி, சாமியாராக இருந்தாலும் சரி, பொய் சொன்னால் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டும்” என்று நடிகர் சித்தார்த் பதிவிட்டது. கடும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் அவருக்கு எதிராக நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ரத்து செய்வோம், நீட் தேர்வு ரத்து செய்வது எப்படி என்று எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்தது திமுக. ஆனால் நேற்று தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெற்றது. மேலும் நீட் தேர்வு அச்சத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் செல்வகுமார் என்கிற வலைதளவாசி ஒருவர். தனது டிவீட்டர் பக்கத்தில். நீட் தேர்வை முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ரத்து செய்வோம் என திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இன்று நீட் நடக்கிறது பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் என சொன்ன ஐயா சித்தார்த் என்ன பண்ண போறீங்க ? என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு கோவப்பட்ட சித்தார்த் அநாகரிகமான முறையில் பதிலளித்திருந்தார்.

அதில், மூதேவி, கோபமோ, சந்தேகமும் வந்தா, துப்பு இருந்தா போய் நீ கேளு. இல்ல உங்க அப்பனிடம் போய் கேளு, நான் என் வேலையை தாண்டா பார்க்கிறேன். பொறுக்கி பசங்களா, இதே வேலையா போச்சு, டிவீட்டர் டாய்லெட் ஆக்கி வச்சிருக்கீங்க, வேற எங்க மலரும் சாக்கடையில் தான் மலரும். எழவு இந்தியில சொல்லவா.? என ஒரு பொது தளத்தில் அநாகரிகமாக பதிலளித்த நடிகர் சித்தார்த்க்கு பலர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர் அதில் வலைதளவாசி ஒருவர். ஏன்டா நாயே, தப்பு செஞ்சா முதல்வராக இருந்தாலும் அறைவேன்னு சொன்னியே, இப்போ பொய் சொல்லி ஏமாத்துனதால ஒரு உயிர் போயிடிச்சி, சொரணை இல்லாம ட்வீட் போட்ருக்க என பதிலடி கொடுத்துள்ளார்.