கணவரின் திருமணமான நண்பருடன் 2 வது திருமணம்… சீரியல் நடிகை ஸ்ரீதிகா கொடுத்த ஷாக்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரை நட்சத்திரங்களை விட சின்னத்திரை நட்சத்திரங்கள் தினமும் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் கவரப்பட்ட நடிகர்களாக வலம் வருகின்றார்கள். விஜய் டிவி, சன் டிவி ஆகியவை இதற்காகவே போட்டி போட்டு புதிய புதிய சீரியல்களை ஒளிபரப்பாக்கி வருகின்றன. இதில் நடிக்கும் நாயகி, நாயகன் மற்றும் வில்லிகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானாலும் மிகவும் ஃபேமஸான நட்சத்திரங்களாகவே திகழ்ந்து வருகின்றார்கள்.

நாதஸ்வரம், மகராசி போன்ற சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ஸ்ரீதிகா. தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டதாகவும் தான் விரைவில் மகராசி சீரியலில் தன்னோடு நடித்த நடிகர் ஆரியனை திருமணம் செய்ய போவதாகவும் திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். சீரியல் நடிகை ஸ்ரீதிகா மலேசியாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தற்போது சென்னையில் குடியேறி பக்கா சென்னை பெண்ணாக மாறிவிட்டார்.

தமிழில் வெண்ணிலா கபடி குழு படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த கேரக்டருக்கு பக்காவாக பொருந்துகிற முக அழகும் குரலும் இவரது ரசிகர்களுக்கு பிளஸ் பாயிண்டாக இருக்கிறதாம். ஸ்ரீதிகா நடிகை மட்டுமல்ல சில கதாநாயகிகளுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் தனுஷ் நடித்த வேங்கை படத்தில் தனுஷின் தங்கையாக கலக்கியிருப்பார் உண்மையான ஒரு அண்ணன் தங்கச்சி பாசத்தை அப்படியே கண்முன் காட்டி இருப்பார்.

சீரியல் நடிகை ஸ்ரீதிகாவிற்கு இன்ஸ்டாகிராமில் அதிகமான பாலோவர்ஸ் இருக்கின்றனர். இந்த நிலையில் அவர் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இந்த முக்கியமான செய்தியை எங்கள் சமூக ஊடக குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் அதில், நானும் ஆரியனும் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு எங்களுடைய முந்தைய திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து விட்டோம்.

எங்கள் இருவருக்கும் ஏற்கனவே வேறொரு திருமண வாழ்க்கை இருந்தாலும் அந்த வாழ்க்கையை பற்றி நாங்கள் குறை கூற விரும்பவில்லை. அந்த வாழ்க்கை பற்றி எதிர்மறையை பரப்பவும் நாங்கள் விரும்பவில்லை. எங்களின் தூய நட்பும், அன்பும் எங்களின் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு எடுத்து செல்லும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு அளித்திருக்கிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் எங்கள் பெற்றோரின் ஆசிர்வாதத்துடனும் நாங்கள் பதிவு திருமணத்தை செய்ய உள்ளோம். அப்போது போல நாங்கள் எடுத்த இந்த முடிவுக்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் பொழியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடக நேர்காணலில் விரைவில் பகிர்ந்து கொள்வோம் எனவும் நீங்கள் அனைவரும் எங்களின் புது வாழ்க்கைக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அந்த பதிவை நடிகை ஸ்ரீதிகா மற்றும் ஆரியன் இருவரும் பகிர்ந்துள்ளனர். சீரியல் நடிகை ஸ்ரீதிகாவிற்கு ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருந்தது. அதுபோல அவருடைய திருமணத்தில் நடிகர் ஆரியன் தன்னுடைய மனைவியோடு கலந்து கொண்டு இருந்தார்.

அந்த புகைப்படங்களும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சில மாதங்களாகவே ஆரியன், ஸ்ரீதிகா இருவரும் ரீல்ஸ் வீடியோஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இருவரும் காதலிக்கிறார்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இப்போது திருமணம் செய்ய இருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.