நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாநாடு திரைப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளார்.
சிம்பு நடிக்கும் படங்கள் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாது, அதற்கான பைனான்ஸ் கிடைக்காது என பல குற்றச்சாட்டுகள் அவர் மேல் வைக்கப்பட்டு வந்தன. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் இப்போது மாநாடு படம் அந்த விமர்சனங்களை ஓரம் கட்டியுள்ளது.
சிம்புவின் கேரியரில் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்துள்ளது. நான்கே நாளில் அனைவருக்கும் லாபம் கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். அதில் ‘மாநாடு திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மாறுபட்ட திரைக்கதையும், விறுவிறுப்புக் குறையாத காட்சிகளும் திரைப்படத்தை நகர்த்திக் கொண்டு செல்கின்றன.
இஸ்லாமியர்கள் பற்றி பொதுபுத்தியில் கட்டமைக்கப்பட்டு இருக்கும் தவறான பிம்பத்தைத் தகர்த்தெறியும் விதத்தில் வசனங்களையும் காட்சிகளையும் அமைத்திருப்பது திரைப்படத்தின் சிறப்பாகும்.’ எனக் கூறியுள்ளார். மேலும் படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர்கள் சிலம்பரசன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோரையும் தனித்தனியாக பாராட்டியுள்ளார்.