டிக்டாக் மூலமாக பிரபலமான ஜி பி முத்து இப்போது வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார்.
டிக்டாக் செயலியின் மூலமாக தினமும் தனது அன்றாட நடவடிக்கைகளை வீடியோவாக வெளியிட்டு பிரபலம் ஆனவர் ஜி பி முத்து. அவரின் வெகுளித்தனமான பேச்சும், வட்டார வழக்கு மொழி நடையும் அவரை தமிழக மக்களின் நெஞ்சில் இடம்பிடித்தார். அதே போல தனது சில வீடியோக்களால் சர்ச்சைகளிலும் சிக்கினார்.
ஒரு கட்டத்தில் டிக்டாக் தடை செய்யப்பட்ட போது யுடியூபுக்கு சென்று சேனல் ஆரம்பித்து அதன் மூலம் வருவாயும் ஈட்ட ஆரம்பித்தார். அவரின் ரசிகர்கள் அனுப்பும் கடிதங்களைப் படித்து அதை வீடியோவாக வெளியிட அது வைரல் ஹிட் ஆனது. இப்படி நாளுக்கு நாள் அவரின் வளர்ச்சி அதிகமாகிக் கொண்டே செல்ல சும்மா விடுவார்களா சினிமாக்காரர்கள்.
அவரை படங்களில் காமெடியனாக புக் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்நிலையில் இப்போது சந்தானம் நடிப்பில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் புதிய படத்தில் ஜி பி முத்து ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். சந்தானம் எப்ப்போதும் இதுபோல வைரலாகும் நபர்களை தன் படங்களில் பயன்படுத்திக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.