அஜித்தை நெகிழ வைத்த ரஷ்யா ரசிகர்

0
Follow on Google News

அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பை ரஷ்யாவில் முடித்துவிட்டு வந்திருக்கும் படக்குழு தற்போது அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அஜித்துக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது நல்ல குணநலன்களுக்காக சூட்டிங் ஸ்பாட்டிலும் நிறைய ரசிகர்கள் உருவாகியுள்ளனர். ரஷ்ய படப்பிடிப்பின்போது அப்படியொரு ரசிகர் ஒருவர் அஜித்துக்கு கிடைத்துள்ளார்.

ரஷ்யாவில் கொலோம்னா சிட்டியில் படப்பிடிப்பு நடத்திய படக்குழுவுக்கு அங்குள்ள லோக்கல் டிரைவர் அலெக்ஸ் என்பவர் கார் ஓட்டுனராக இருந்துள்ளார். தினமும் படக்குழுவினரை படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்துச் சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்த அலெக்ஸுக்கு அஜித்தை ரொம்பவும் பிடித்துப்போக, ‘AJITH, KOLOMNA LOVES YOU!!!” என்ற வாசகம் அச்சடித்த டீஷர்ட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

அதாவது அஜித்தை கொலோம்னா ரொம்பவும் விரும்புவதாக அந்த டீசர்ட்டில் அச்சடித்துள்ளார். இதை அஜித்துக்கு பரிசாக கொடுத்த அந்த ரசிகர், “கொலோம்னா நகரத்தில் வசிக்கும் அனைவரும் உங்களை நேசிக்கிறார்கள். ஏனென்றால், நாங்கள் சந்தித்த நல்ல மனிதர் நீங்கள்” என்று தெரிவித்துள்ளார். இது அஜித்துக்கு ரொம்பவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த டீசர்ட் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.