நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உட்பட சில படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கி நடித்துள்ள, ’ஒரு இயக்குனரின் காதல் டைரி’ திரைப்படம் வெளியான பின்பு, இயக்குநர் வேலு பிரபாகரன் தன்னை விட 30 வயது குறைவான நடிகை ஷெர்லியை வித்தியாசமான முறையில் திடீரென 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். வேலு பிரபாகரன் இயக்கிய திரைப்படத்தில் நடித்தவர் ஷெர்லி. இவர்கள் திருமணம் நடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்றபோது, வேலு பிரபாகரனுக்கு வயது 60. ஷெர்லிக்கு வயது 30 என்பது குறிப்பிடதக்கது.
நடிகை ஷெர்லி தாஸ், வேலு பிரபாகரன் இயக்கிய ’வேலு பிரபாகரனின் காதல் கதை’ படத்தில் கதாநாயகியாக நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தொடர்ந்து ஆபாச படங்களுக்கு பெயர் போனவரான இயக்குனர் வேலு பிரபாகரன் இயக்கிய திரைப்படங்கள் ஆபாச காட்சிகள் நிறைந்து இருக்கும், மேலும் தொலைக்காட்சிகளில் பகுத்தறிவு மற்றும் நாத்திகம் போன்ற கருத்துக்களை அவ்வப்போது பேசி வருகின்றவர்,
இந்நிலையில் தென் இந்திய சினிமா துறையில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, சினிமாவில் முன்னணியில் இருப்பதால் 37 வயதை கடந்தும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார், இந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் நடிக்க மறுப்பு தெரிவிதித்து வரும் நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென் இந்திய சினிமா படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் .
தொடர்ந்து தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாராவை வெப் சீரியலில் நடிக்க இயக்குனர் வேலு பிரபாகரன் அணுகியதாக கூறப்படுகிறது, முதலில் பத்து கோடி வரை சம்பளம் பேசியதாக கூறப்படுகிறது, பின் நயன்தாரா நடிக்க மறுப்பு தெரிவித்த பின் மேலும் இரண்டு கோடி வரை சம்பளத்தை கூட்டி 12 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது, ஆனால் நயன்தாரா திட்டவட்டமாக வேலு பிரபாகரன் இயக்கத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் OTT தளத்தில் நயன்தாராவை வைத்து படம் இயக்கி பெரும் தொகைக்கு விற்று லாபம் பார்த்து விடலாம் என்று பெரும் கனவில் நயன்தாராவை தொடர்பு கொண்ட வேலு பிரபாகரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, இதனை தொடர்ந்து வெப் சீரியல் எடுக்கும் முயற்சியை தற்காலிகமாக வேலு பிரபாகரன் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும்.