பேன் இந்தியா படம் என்று ஓவர் பில்டப் கொடுத்து கங்குவா போன்று நிறைய படங்கள் வந்தாலும், ஒரிஜினல் பேன் இந்தியா படமாக ஒரு சில படங்கள் மட்டுமே வரும். அப்படி ஒரிஜினல் ஃபேன் இந்தியா படமாக வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது புஷ்பா 2 படத்தைப் பார்ப்பவர்களை அந்த படத்துடனே ட்ராவல் பண்ண வைக்கும் வகையில் அமைத்துள்ளது அந்த படத்தின் சுவாரசியமான கதை.
மேலும் படத்தில் பல புதுமையான காட்சிகள் மிக சுவாரசியமாக உள்ளது என புஷ்பா 2 படம் பார்த்தவர்கள் பாசிட்டிவாக விமர்சனம் செய்து வருகிறார்கள். படம் மூன்றரை மணி நேரத்தை கடந்து ஓடும் என்று ஆரம்பத்தில் தகவல் வெளியான போது, படம் பார்க்க சென்ற பலரும் ஐயோ 3 மணி நேரத்திற்கு மேல் உள்ளே உட்கார வேண்டுமா என்கின்ற ஒரு வித அச்சத்துடனே படம் பார்க்க சென்றனர்.
ஆனால் முதல் 1 முக்கால் மணி நேரம் அதாவது முதல் பாதி மிகப் பெரிய அளவில் விறுவிறுப்பாக, எப்படி அந்த ஒன்னே முக்கால் நேரம் சென்றது என்று தெரியாத அளவிற்கு படம் விறுவிறுப்பாக இருந்தது, என்னடா இப்பதான் நுழைந்தோம் அதற்குள் இன்டர்வலா என்று படத்தை பார்க்கின்றவர்களுக்கு நேரம் போனதே முதல் பாதையில் தெரியவில்லை,
சுமார் 3 மணி நேர படத்தில் எங்கேயாவது ஏதாவது ஒரு இடத்தில் படம் லாக் ஆகும் என்று எதிர்பார்த்தால் எந்த இடத்திலும் லாக் ஆகாமல் விறுவிறுப்பாக சென்றது. இரண்டாவது பாதி வழக்கமான தெலுங்கு மசாலா படங்களை நோக்கி நகர்கிறது. இதற்கு முக்கிய காரணம் தெலுங்கு ரசிகர்களையும் பெரும் அளவு கவர வேண்டும் என்பதற்காக எப்படி வைத்திருக்கலாம். இருந்தாலும் தெலுங்கு மசாலா கலந்த படமாக இருந்தாலும் மிகவும் டிபிக்கல் ஆன ஒரு கதையாக எல்லாருமே பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.
ஆனால் முதல் பாதியில் இருந்த அந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இருக்கா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால் இரண்டாம் பாதி படம் பார்ப்பவர்களுக்கு எந்த ஒரு அலுப்பு தட்டாமல் இருக்கிறது இரண்டாம் பாதியுடன் ஒப்பிடும்பொழுது முதல் பாதி வேற லெவல் உள்ளது. மொத்தத்தில் படம் நல்ல ஒரு எண்டர்டைமென்ட் ஆக உள்ளது. எல்லாருமே ரசிச்சு அந்த படத்தை பார்க்கிறார்கள்.
இந்த படத்தை மூன்றரை மணி நேரம் தூக்கி நிப்பாட்டுவதற்கு முக்கிய காரணம் அல்லு அர்ஜுன்தான், வேற லெவல் அவருடைய டான்ஸ் பைட் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஒரு லேடி கேட்டபில் வந்து அம்மன் பாடலுக்கு அல்லு அர்ஜுன் ஆட்டம் வேற லெவல் என்று சொல்ல வேண்டும். குறிப்பாக இந்த பாடல் எல்லாம் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் கோயில் திருவிழாக்களில் திரையில் ஒளிபரப்பப்பட்டால் அங்கே இந்த பாடலை பார்ப்பவர்கள் பலருக்கும் சாமி வந்துவிடும்.
அந்த அளவிற்கு அந்த பாடலின் கோரியகிராப் அல்லு அர்ஜுனின் கெட்டப், மேலும் அல்லு அர்ஜுனின் டான்ஸ் அமைந்துள்ளது. குறிப்பா புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனாவின் டான்ஸ் மற்றும் கோரியோ கிராப் எவ்வளவு பாராட்டினாலும் பாராட்டலாம், காரணம் இந்த படத்தில் அல்லு அர்ஜுனன் டான்ஸ் மூவ்மெண்ட் இதற்கு முன்பு வேறு எந்த படத்திலும் பார்த்திருக்க முடியாத அளவிற்கு ரொம்ப கடினமான ஸ்டெப் ஆக உள்ளது.
குறிப்பாக இதுபோன்ற ஆக்சன் மசாலா படங்களில் லாஜிக் பார்க்க கூடாது ஆனால் 40 நாட்கள் ஜப்பானிலிருந்து கண்டெய்னரில் டிராவல் செய்து வருகிறார் ஹீரோ, 40 நாட்கள் சோறு தண்ணி ஏதும் இல்லாமல் வரும் அவர் ஒரு 300 பேரை அடித்து தூம்சம் செய்கிறார் என்பதெல்லாம் இந்த படத்தில் நினைத்து பார்க்க முடியாத ஒரு லாஜிக்காக இருக்கிறது. ஆனால் அதை ஒரு கனவாக அந்த படத்தில் காண்பித்து இருப்பார்கள், அந்த வகையில் புஷ்பா 2 பார்த்து கொண்டாட வேண்டிய படம் என்று சொல்லப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.