தலையே சுத்துது…. 6 நாளில் புஷ்பா எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

0
Follow on Google News

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள வெறும் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆகி இரண்டே நாளில் 450 கோடி வசூலை பெற்று, எப்படியும் படம் ரிலீஸ் ஆகி ஆறு நாட்களுக்குள் 600 கோடியை தொடும் நிலையில் உள்ளது. அதே நேரத்தில் இந்த படம் ஆயிரம் கோடி வசூல் எளிதாக அடைந்து விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இப்படி தொடர்ந்து தெலுங்கு சினிமா நடிகர்கள் நடிப்பில் வெளியாகும் படங்கள் அடுத்தடுத்து ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி வசூல் என்பது கனவாகவே இருந்து வருகிறது. குறிப்பாக சமீபகாலமாக தெலுங்கு நடிகர்கள் நடிக்கும் படங்களை தமிழ் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருவதற்கு முக்கிய காரணம் அவர்கள் படத்தில் கதையும் பிரம்மாண்டமும் தான் என்பதை மறுக்க முடியாது.

குறிப்பாக தமிழ் நடிகர்களை ஒப்பிடும்பொழுது தெலுங்கு சினிமா நடிகர்களின் உழைப்பு என்பது அளப்பரியாதது, மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை திரையில் கொடுக்க வேண்டும் என்று எழுதப்படும் திரைக்கதை மற்றும் காட்சிகள் இவை அனைத்துமே தமிழ் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு உள்ளது தெலுங்கு நடிகர்கள் நடிக்கும் படங்கள்.

குறிப்பாக தமிழ் சினிமாக்கள் பல கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டாலும் கூட அதில் 90 சதவீதம் நடிகர்களின் சம்பளத்திற்கே சென்றுவிடும், வெறும் பத்து சதவீதத்தில் தான் படமே எடுத்து முடிக்கப்படும். குறிப்பாக தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படம் என்று வர்ணிக்கப்பட்ட பொன்னின் செல்வன் போன்ற படத்தை எல்லாம் ராஜமவுலி இயக்கியிருந்தால் என்றால் அந்த படம் இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கும், அனைத்து மொழி ரசிகர்களுமே கொண்டாடி இருப்பார்கள்.

ஆனால் பல விஷயங்கள் பொன்னியின் செல்வன் படத்தில் மிஸ் ஆனதால் தான் முதல் பார்ட்டை கொண்டாடிய ரசிகர்கள் இரண்டாம் பாதியை கொண்டாடவில்லை, குறிப்பாக இரண்டாம் பார்ட் ஓடவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும், அந்த வகையில் ஒரு தமிழன் வரலாற்று என்ன செய்திருக்கிறார் என்று பார்ப்பதற்காக கூடிய கூட்டம் தான் பார்ட் 1, ஆனால் பார்ட் 2 ரொம்ப மோசமாக ஆக இருந்ததால்தான் ஓடவில்லை.

அந்த வகையில் இதே பொன்னியின் செல்வன் கதையை ராஜமவுலி போன்ற இயக்குனர் எடுத்திருந்தால் மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு இருக்கும், அந்த வகையில் தமிழ் படங்களில் பட்ஜெட்டை மிகப்பெரிய அளவில் குறைத்துவிட்டு சம்பளத்தை அதிகம் வாங்குவதால் தான் திரையில் மிக பிரம்மாண்டம் எடுபடவில்லை. குறிப்பாக தற்பொழுது அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள புஷ்பா 2 படம் திரையில் பார்க்கவே மிக பிரம்மாண்டமாக இருக்கிறது.

மேலும் அல்லு அர்ஜுனின் நடிப்பு உயிரை கொடுத்து நடித்துள்ளார் என்பது திரையில் பார்க்கும் பொழுது தெரிகிறது. அந்த டெடிகேஷன் தமிழ் நடிகர்களுக்கு இல்லை, அந்த வகையில் தெலுங்கு சினிமா போன்று ஆயிரம் கோடி வசூல் என்பதெல்லாம் இதுவரை தமிழ் சினிமாவிற்கு கனவாக இருப்பதற்கு இது போன்ற காரணங்கள் தான் என கூறப்படுகிறது.

மேலும் கதையில் தமிழ் சினிமா உச்ச நடிகர்கள் தலையீடு செய்து குளறுபடி செய்வது படத்திற்கு தோல்வியாக அமைந்துவிடுகிறது. அதே நேரத்தில் தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்கள் எல்லாம் அந்த இயக்குனர்களிடம் கதையில் சில மாற்றங்கள் கொண்டுவர சொல்வது வழக்கம். ஆனால் அது அவர்களுக்கு ஒர்க் அவுட் ஆகுது. ஆனால் தமிழ் சினிமாவில் ஒர்க் அவுட் ஆகவில்லை மொத்தத்தில் தமிழ் சினிமா வை மிஞ்சி மிக உயரத்திற்கு தெலுங்கு சினிமா சென்றதற்கு காரணம் அங்கே நடிகர்கள் தங்களை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டது தான் என கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here