மதுரை சிறிய கிராமத்தில் பிறந்து சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து, காமெடி நடிகராக பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக பல கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நடிகர் சூரி, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அடுத்த அவதாரத்தை எடுத்துள்ளார்.
நடிகர் சூரியின் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் விடுதலை படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் விடுதலை படத்திற்கு பின்பு சூரியின் அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது . இந்த நிலையில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிகர் தனுஷ் ஆகியோரை வைத்து படம் இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் தற்பொழுது அடுத்து நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை இயக்குவதற்கு கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை சூரியின் மேனேஜர் குமார் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூரியன் மேனேஜர் குமார் ஏற்கனவே நடிகர் சந்தானம் நடித்த படத்தையும் தயாரித்துள்ளார். மேலும் இயக்குனர் துரை செந்தில்குமார் நடிகர் சிவகார்த்திகேயன் தனுஷ் ஆகியோரை வைத்து படங்களை இயக்கியவர் தற்பொழுது விடுதலை படத்திற்குப் பின்பு சூரி மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உயரும் என்பதால் முன்கூட்டியே அவரிடம் கால் சீட் பெற்று தற்போது கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
விடுதலை படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் கூட இப்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கும் படப்பிடிப்பு மதுரை அருகே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சூரி மேனேஜர் குமார் தயாரிப்பாளராக உருவெடுப்பதற்கு பின்னணியில் சூரி முக்கிய பங்காற்றிய வருவதாகவும் அந்த வகையில் தன்னுடைய மேனேஜர் தயாரிப்பாளராக உருவாக்குவது துணையாக இருந்த சூரியின் அந்த மனசு தான் கடவுள் என்கின்றனர் சினிமா துறையினர்