வாழ்கை கொடுத்த பஞ்சு அருணாச்சலம்.. நன்றி உணர்வு இல்லாமல் இளையராஜா இப்படி செய்யலாமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவின் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட பஞ்சு அருணாச்சலத்தின் 80வது ஆண்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் திரையுலகை சேர்ந்த மூத்த கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன்,

பஞ்சு அருணாச்சலம் இல்லை என்றால் எங்கள் பரம்பரை இல்லை. எங்கள் குடும்பத்துக்கு பிள்ளையார் சுழி போட்டவர் பஞ்சு அருணாச்சலம் தான் எனவும், இளையராஜா இசையமைக்க காரணமாக இருந்தவர் எங்களை வளர்த்து தொட்டு தூக்கியவர் பஞ்சு அருணாச்சலம். சினிமாவில் இளையராஜாவை தொட்டு தூக்கியவர் பஞ்சு அருணாச்சலம். என்னை தொட்டு தூக்கியவர் பாரதிராஜா தான் என்று கங்கை அமரன் பேசினார்.

அதே போன்று இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், நான், இளையராஜா, கங்கை அமரன் ஆகிய எல்லாரும் பஞ்சு அருணாச்சலம் வீட்டு உப்பை தின்று வளர்ந்தவர்கள், காலில் விழுந்து வணங்க வேண்டிய மகா தெய்வம் பஞ்சு அருணாச்சலம். பஞ்சு அருணாச்சலம் இல்லை என்றால் இசை ஞானி இளையராஜா பிறந்திருக்க முடியாது என பாரதிராஜா பேசினார்.

இந்த அளவுக்கு பஞ்சு அருணாச்சலத்தை இளையராஜாவுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள் என்றால், இளையராஜா குடும்பம் இன்று செல்வ செழிப்புடன் இருப்பதற்கு முக்கிய காரணம் அஞ்சு அருணாச்சலம். அவருடைய சொந்த படமான அன்னக்கிளி படத்தில் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் பஞ்சு அருணாச்சலம்.

ஆனால் பஞ்சு அருணாச்சலத்தின் சகோதரர்கள் இளையராஜா வேண்டாம் எம் எஸ் விஸ்வநாதனே இதில் இசையமைக்கட்டும் என்று பிடிவாதமாக இருந்துள்ளனர். அவர்களிடம் சண்டையிட்டு இளையராஜாவை அன்னக்கிளி படத்தில் இசை அமைக்க வாய்ப்பை தந்தார் பஞ்சு அருணாச்சலம். இளையராஜா அன்னக்கிளி படத்தில் அனைத்து பாடல்களும் இசையமைத்த பின்பு ரீ-கார்டிங் எம் எஸ் விஸ்வநாதன் அமைக்கட்டும் என்று பஞ்சு அருணாச்சலம் சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு வேண்டாம் இளையராஜாவே ரீ-ரிக்கார்டிங் செய்யட்டும் என்று பஞ்சு அருணாச்சலம் பிடிவாதமாக இருந்து அன்னக்கிளி படத்தில் இளையராஜாவை அடையாளப்படுத்தியவர் பஞ்சு அருணாச்சலம். பஞ்சு அருணாச்சலம் 80 பிறந்த தினம் சமீபத்தில் அவருடைய குடும்பத்தினர் கொண்டாடினார்கள். இதில் முக்கியமாக பஞ்சு அருணாச்சலம் குடும்பத்திற்கு கடமைப்பட்ட இளையராஜா முகம் கடுகடு என்று இருந்தது.

இது குறித்து விசாரித்ததில் இந்த நிகழ்ச்சியை தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி உள்ளது, அதனால் அந்த தனியார் நிறுவனத்திடம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாரதிராஜா ஒரு லட்ச ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு வந்துள்ளார். இந்த விஷயம் இளையராஜாவுக்கு மேடை ஏறுவதற்கு முன்புதான் தெரிந்துள்ளது.

அந்த வகையில் பாரதிராஜாவுக்கு பணம் கொடுத்தவர்கள் தனக்கு பணம் கொடுக்கவில்லை என்று இளையராஜா கடுகடு என்று இருந்ததாகவும், நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்கவில்லை என்று இளையராஜா கடுகடு என்று இருந்தது என்ன ஒரு நன்றி உணர்வு என்கின்ற விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.