வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் விடுதலை. இந்த படம் மிக குறைந்த செலவில், 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் எடுத்து வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் சுமார் இரண்டு வருடங்களை கடந்தும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்து படப்பிடிப்புகளை நடத்திக் கொண்டு தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய செலவை இழுத்து விட்டு வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
4 கோடியில் பட்ஜெட்டில் தொடங்கிய விடுதலை படம் தற்பொழுது 40 கோடியை கடந்தும் எப்போது திரைக்கு வரும் என்பது பெரும் கேள்விக்குறியாக அமைந்துள்ளது. இதனால் மிகப் பெரிய சிக்கலில் இருக்கிறார் இந்த படத்தின் தயாரிப்பாளர். இந்நிலையில் சமீபத்தில் திரைக்கு வந்த கோப்ரா, இதே போன்று பல சிக்கலை கடந்து திரைக்கு வந்து மிக பெரிய தோல்வியை சந்தித்து அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து, இந்த படத்தை வெளியிடுவதற்க்கு முதல் நாள் தான் தயாரிப்பாளருக்கு படத்தை போட்டு காண்பித்துள்ளார். படத்தை பார்த்த தயாரிப்பாளர் லலித் குமார், மற்றும் இந்த படத்தை வெளியிட்ட உதயநிதி ஆகியோர் 3.30 மணி நேரம் உள்ள படத்தின் நீளத்தை குறைக்க வேண்டும் என இருவருமே அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதற்கு அஜய் ஞானமுத்து அதெல்லாம் முடியாது தெரிவித்தவர்.
மேலும் நாளை படம் வெளியாக இருப்பதால் படத்தின் அளவை குறைக்க முடியாது என தெரிவித்துவிட்டார். படத்தைப் பார்த்தால் தயாரிப்பாளர்கள் எதாவது மாற்றம் செய்ய சொல்லுவார் என்பதால் தான், முன்கூட்டியே படத்தை தயாரிப்பாளருக்கு போட்டு காண்பிக்காமல் படம் வெளியாகும் முதல் நாள் போட்டு காண்பித்துள்ளார் அந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கோப்ரா படம் வெளியாகி அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து கோபுரா படத்தின் இயக்குனருக்கு ரெட் கார்டு விதித்து இனி அவரை வைத்து யாரும் படம் எடுக்காத வகையில், அவருக்கு ரெட் கார்டு கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் தானு.
இந்நிலையில் கோப்ரா தயாரிப்பாளர் செய்ய வேண்டிய வேலையை எதற்காக தானு ஈடுபட்டு வருகிறார் என்கின்ற குழப்பம் பலருக்கு நீடித்து வருகிறது. இதுகுறித்து விசாரித்ததில், கோப்ரா இயக்குனர் போன்றே வெற்றிமாறனும் விடுதலைப் படத்தில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படம் வரும் டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விடுதலை படம் போன்று குறிப்பிட்ட காலத்திற்குள் வாடிவாசல் படத்தை எடுக்காமல் வெற்றிமாறன் இழுத்தடிப்பு செய்யலாம், மேலும் தற்பொழுது வாடிவாசல் படம் இதுவரை 50 கோடி வரை விற்பனையாகியுள்ளது. அதனால் குறிப்பிட்ட பட்ஜெட்டை இந்த படம் தாண்டினால் அல்லது குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த படம் வெளியாகாமல் தாமதமானால் அது தானுவுக்கு அது மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும்.
இதனால் தற்பொழுது கோபுர பட இயக்குனருக்கு ரெட் கார்ட் விதிக்க தாணு களத்தில் இறங்கியுள்ளது. தன்னுடைய தயாரிப்பில் வாடிவாசல் படத்தை இயக்கும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு விடுக்கும் எச்சரிக்கை என்றும். மற்றவர்களிடம் விளையாட்டு காட்டுவது போல் வெற்றிமாறன் தன்னிடம் நடந்து கொண்டால், அவரை வைத்து இனி எந்த ஒரு தயாரிப்பாளரும் படம் எடுக்க முடியாத சூழல் உருவாகும் என வெற்றிமாறனை எச்சரிக்கும் விதத்தில் தான் தயாரிப்பாளர் தாணு கோப்ரா பட விவகாரத்தில் தீவிரமா ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.