ஜகா படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது, அதில் இந்துக்கள் வணங்கக்கூடிய எல்லாம் ஈசனை இழிவுபடுத்தும் வகையில் ஈசனை கொரோனா நோயாளியை போல் வேடம் அணிந்து ஜகா படத்தின் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் போஸ்டர் டிசைன் மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் இந்துக்களின் மனங்களை புண்படுத்துவதாக உள்ளது. வழக்கம் போல இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் செயல்களை இன்றைய தலைமுறை இயக்குநர்கள் கைவிட வேண்டும் என்றும்.
இந்த போஸ்டர் சம்பந்தமான முறையான விளக்கத்தை படக்குழு தரவேண்டும். சம்பந்தமான முறையான விளக்கத்தை படக்குழு தரவேண்டும்.என திரைப்பட விநியோகஸ்தர் ஜெயம் SK கோபி தனது கண்டனத்தை பதிவு செய்தார். இதே போன்று தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி தலைவர் திருமாறன் ஜி, தமிழ்நாட்டில் இந்தப் படம் ஓட வேண்டுமா.? ஓட வேண்டும்மென்றால் இந்த படத்திற்கு போஸ் கொடுத்த இந்த நடிகர் கைது செய்யப்படவேண்டும் என்றும்,
இந்த இயக்குனர்பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் ஈசனை இழிவாக சித்தரித்து இந்தப் படம் ஓடும் என்று கனவிலும் நினைக்காதே என படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து படத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில். ஓம் டாக்கிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் “ஜகா” 11-11-2021 எங்களது படத்தின் ப்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.
அது பலரின் விவாதத்துக்கு உள்ளானது அதுகுறித்து தெளிவுபடுத்தவே இந்த அறிக்கை. எங்களது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே ஓம் டாக்கிஸ். பாபநாசம் சிவன் கோயிலில் பூஜை போட்டுவிட்டுதான் படப்பிடிப்பையே தொடங்கினோம். அப்படியிருக்கும்போது சிவபெருமானை அவமதிப்போமா? கோவிட்-19 விழிப்புணர்வு நோக்கத்தில் வைக்கப்பட்ட காட்சிதான் அது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறக்கூடாது என கடவுளே சொல்வது போன்றுத்துதான் அந்த போஸ்டர்.
சக மனிதர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதைவிட, கடவுள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால்
நல்ல பலன் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டது. படத்தில் எந்த இடத்திலும் கடவுள் அவமதிக்கப்படவில்லை. அது போன்ற எண்ணம் ஒருக்காலும் எங்களுக்கு ஏற்படாது. மலிவான விளம்பரம் போடும் விருப்பம் எங்கள் குழுவினருக்கு துளியும் இல்லை. இருப்பினும் எந்தவித உள்நோக்கமும் இல்லாது செயல்பட்ட எங்களின் இத்தகைய செயல் பலரின் மனதை புண்பட்டது அறிந்து வருந்துகிறேன் அதற்காக மன்னிப்பு கூறுவதோடு கொரோனா இல்லாத உலகம் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி என இயக்குனர் தெரிவித்துள்ளார்.