ஒரு வழியாக திரையரங்கில் ரிலீஸாகும் பிரபுதேவாவின் படம்!

0
Follow on Google News

நடிகர் பிரபுதேவா நடித்துள்ள தேள் திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பிரபுதேவா நடித்த படங்கள் ஒரு கட்டத்தில் தோல்வி அடைய ஆரம்பித்ததும், அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குனர் அவதாரம் எடுத்தார். அவர் விஜய்யை வைத்து இயக்கிய போக்கிரி திரைப்படம் அவரைக் கமர்ஷியல் இயக்குனராக்கியது.

இதே படத்தை அவர் இந்தியில் வாண்டட் என்ற பெயரில் சல்மான் கானை வைத்து இயக்கி அங்கும் முன்னணி நடிகர்களின் இயக்குனரானார். தொடர்ந்து சல்மான் கான் நடிப்பில் சில படங்களை இயக்கினார். அதில் கடைசியாக இயக்கிய ராதே படம் படுதோல்வி அடைந்தது.

அதையடுத்து இப்போது அவர் தமிழில் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் 5 க்கும் மேற்பட்ட படங்கள் உருவாகியுள்ளன. சில படங்கள் ரிலிஸுக்கும் தயாராக் உள்ளன. ஆனால் எந்த படமும் திரையரங்கில் ரிலிஸ் ஆவதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடன இயக்குனர் ஹரிக்குமார் இயக்கியுள்ள தேள் படம் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பின் பிரபுதேவா படம் ஒன்று திரையரங்கில் வெளியாக உள்ள்ளது. அடுத்தடுத்து யங் மங் சங், ஊமைவிழிகள் மற்றும் பஹீரா ஆகிய படங்கள் ரிலிஸுக்காக காத்திருக்கின்றன.