கட்டி எழுப்பப்படுகிறது ராஜராஜன் சோழன் நினைவிடம்… களத்தில் இறங்கிய மணிரத்தினம், கார்த்திக், ஜெயம் ரவி..!

0
Follow on Google News

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் மிகப்பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டெம்பர் மாதம் திரையில் வெளியாகி சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து இன்னும் சில திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் படம் ஓடி கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா, சரத்குமார் என தமிழ் சினிமா துறையை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பின்பு திரிசா, விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக் ஆகியோருக்கு மார்க்கெட் மேலும் உயர்ந்துள்ளது. குறிப்பாக திரிஷா சமீப காலமாக சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்பு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு பெரும் லாபத்தை ஈட்டு தந்துள்ளது பொன்னியின் செல்வன், அதே போன்று படத்தின் இயக்குனர் மற்றும் அந்த படத்தில் நடித்த அனைவருக்கும் பெயரையும் புகழையும் பெற்று தந்துள்ளது. பொன்னியின் செல்வன் படம் பேன் இந்தியா படமாக வெளியாகி இருந்தாலும் கூட, பிற மொழிகளில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. ஆனால் ஒவ்வொரு தமிழனும் திரையில் இந்த படத்தை பார்த்து வெற்றி அடைய செய்துள்ளார்கள்.

இதற்கு காரணம், பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள தமிழனின் வீரத்தை பறைசாற்றும் விதத்தில் அமைத்த சோழ மன்னரின் கதை தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பல கோடி வசூலை வாரி குவித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் கதையின் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் ராஜாராஜ சோழனின் சமாதி உடையூரில் கேட்பாரற்று ஒரு சிறிய கொட்டகைக்குள் இருக்கிறது.

ஆகையால் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் வந்த லாபத்தில் ஒரு சிறு தொகையை உடையூரில் உள்ள ராஜராஜ சோழன் சமாதியை மிகப் பிரமாண்டமான நினைவிடமாக கட்டுவதற்கு படக்குழுவினர் வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து வந்தது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழா விரைவில் கொண்டாடப்பட இருக்கிறது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் லண்டனிலிருந்து தமிழகம் வருகிறார், மேலும் படம் வெளியாவதற்கு முன்பு தஞ்சாவூரில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை நடத்துவதற்கு பல முயற்சிகளை அந்த படத்தின் இயக்குனர் மேற்கொண்டும் அது நடைபெறாமல் போனது.

அந்த வகையில் விரைவில் வெற்றி விழா கொண்டாட இருக்கும் பொன்னின் செல்வன் பட குழுவினருடன் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குனர் மணிரத்தினம் ஆகியோர் உடையூரில் இருக்கும் ராஜராஜ சோழன் நினைவிடத்திற்கு சென்று அங்கே அவருக்கு மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான முயற்சியில் மணிரத்தினம், கார்த்திக், ஜெயம் ரவி ஆகியோர் மிக தீவிரமாக இறங்கியுள்ளனர்.

உறையூர் சென்று ராஜராஜ சோழன் சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு அங்கே பத்திரிகையாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ள பட குழுவினர். உறையூரில் கேட்பாரற்று கிடக்கும் உலகை ஆண்டவர் சோழ மன்னன் சமாதியை, நினைவிடமாக மிக பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் படக்குழுவின் சார்பில் கட்டி முடிக்கப்படும் என்பதையும் தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.