ஆதித்த கரிகாலன் கொலை செய்யும் போது அருள்மொழி வர்மன் பாலகன்.. ஆதித்த கரிகாலனை கொன்றது யார்.?

0
Follow on Google News

பாகுபலி படத்தைப் பற்றி பெரிதாக யாரும் எதிர்த்து அந்த படத்தின் கதை குறித்து கேள்வி எழுப்ப மாட்டார்கள், இதற்கு காரணம் மகிழ்மதி என்கின்ற ஒரு நாடு கிடையாது, அதில் எந்த ஒரு வரலாற்று உண்மை சம்பவமும் இல்லை, முழுக்க முழுக்க பாகுபலி கற்பனை கதாபாத்திரம். இதனால் யாருடைய வரலாறும் பாதிக்கப்பட போவதில்லை. ஆனால் ஆதித்ய கரிகாலன் கொலை செய்தது யார் என்பது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் வெளியாகாமல் இருந்திருந்தால் இன்று அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஆனால் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் வெளியான பின்பே ஆதித்ய கரிகாலனை கொலை செய்தவர்கள் யார் என்பதை மறக்கடித்து மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார் கல்கி என்கிற விமர்சனம் மேலோங்கியுள்ளது. இது குறித்து தமிழ் ஆர்வலர்கள் திருக்கோவிலில் இடம் பெற்றுள்ள கல்வெட்டை சுட்டிக்காட்டி ஆதித்ய கரிகாலன் தன்னுடைய தந்தை சுந்தர சோழனுக்கு ஒரு பொன் மாளிகையை கட்டி வைத்துள்ளார்.

அந்த பொன் மாளிகையில் சுந்தர சோழன் வாழ்ந்து வருகிறார். மகன் ஆதித்ய கரிகாலன் இறந்தவுடன் நோய்வாய்ப்பட்டு சுந்தர சோழன் அந்த பொன் மாளிகையில் இறந்து விடுகிறார். சுந்தர சோழன் இறந்த பின்பு வானவன்மாதேவி அதாவது சுந்தர சோழனின் மனைவியும், ஆதித்த கரிகாலன் தாயும்மான வானவர்மாதேவி உடன் கட்டை ஏறுகிறார். அப்படி உடன்கட்டை ஏறும் பொழுது தன்னுடைய பாலகனான அருள் மொழி வர்மனை, மகள் குந்தவையிடம் ஒப்படைத்து செல்கிறார் என கல்வெட்டில் குறிப்பிட்டதாக சுட்டிக் காட்டும் தமிழ் ஆர்வலர்கள்.

அப்படியானால் பாலகனான அருள்மொழி வர்மனை குந்தகையுடன் ஒப்படைத்து விட்டு செல்கிறார்கள் என்றால், அந்த காலகட்டத்தில் அருள்மொழி வர்மன் அதாவது ராஜராஜ சோழன் என்கின்ற பாலகனின் வயது நான்கு அல்லது ஐந்து என்று தான் இருக்க வேண்டும். அதேபோன்று இராஜராஜ சோழன் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த அரசன் என்கின்ற கல்வெட்டு ஆதாரமும் உண்டு, மதுராந்தகச் சோழன் ஆட்சி காலம் என்பது 13 ஆண்டு.

ஆதித்ய கரிகாலன் மரணம் அடையும் பொழுது அருள்மொழி வருமனுக்கு மிக சிறிய வயது அதனால் தான் பாலகனுக்கு முடி சூட்ட முடியாது என்பதால் மதுராந்தனுக்கு முடி சூட்டப்படுகிறது. இதில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணம் ஆதித்ய கரிகாலனை கொலை செய்த அந்த நான்கு நபர்களைத் காப்பற்ற தான் என்கின்ற குற்றச்சாட்டும் மேலோங்கி உள்ளது.

இது ஒரு திட்டமிட்ட சதி என்றும், ஒரு பொய்யான வரலாறை நாவல் என்கின்ற பெயரில் எனக்கு சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக எதையோ எழுதி அதுதான் வரலாறு என்று வரலாற்றை திரித்து கூறப்படுவது மிகப்பெரிய வரலாற்று பிழை, குறிப்பாக சோழர்களை பாண்டியர்கள் சதி செய்து கொலை செய்தார்கள் என்பதே ஒரு தவறான வரலாற்றுப் பிழை.

உடையார் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள ஆதித்ய கரிகாலன் கொன்று குல துரோகிகளான ரவிதாசன், சோமன், பரமேசன், தேவதாசன் இந்த நான்கு நபர்கள் தான் ஆதித்ய கரிகாலனை சதி செய்து கொலை செய்தார்கள் இவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என கல்வெட்டு இருப்பதை சுட்டி காட்டி அந்த நன்கு நபர்களை காப்பற்றவே கல்கி பொன்னியின் செல்வன் நாவலை எழுதி ஆதித்ய கரிகாலன் எப்படி இறந்தார் என்பதை ஒரு மர்ம சாவு போன்று சித்தரித்துள்ளார்.

அப்படி சித்தரித்துள்ள கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படம் எடுத்துள்ள மணிரத்தினம் ஆதித்த கரிகாலன் நந்தினி மீது கொண்ட காதலினால், நந்தினி விருப்பத்திற்காக தன்னுடைய கத்தியை நந்தினி கையில் கொடுத்து தன்னை தானே குத்தி தற்கொலை செய்வது போன்று படம் எடுத்து மேலும் வரலாறு மன்னிக்க முடியாத தவறை செய்து விட்டார் மணிரத்தினம் என பொங்கி எழும் தமிழ் ஆர்வலர்கள், இதில் கல்கி நம்பர் 1 டுபாக்கூர் என்றால், மணிரத்தினம் நம்பர் 2 டுபாக்கூர்..