திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது வாழ்க்கை வரலாறு குறித்து, “உங்களில் ஒருவன்” என்ற புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிடும் நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது, வைரமுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து சமூக வலைதளத்தில் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு பிண்ணனி பாடகி சின்மயி கட்டமாக பதில் அளித்துள்ளார்.
வலைதளவாசி ஒருவர் தெரிவித்ததாவது, நேற்று புத்தகத் திருவிழாவை பெரியாரியவாதிகள் அவ்வளவு பேர் இருந்தாங்க, பெண்களின் உரிமைக்காகப் போராடுகிறோம் சொல்ற அவ்வளவு சமூக செயற்பாட்டாளர்கள் இருந்தாங்க, கொஞ்சம் கூட கோபம் வரலையே.! வைரமுத்து அங்கு வந்து பேசிட்டு இருந்ததை பார்த்து கூட்டம் கூட்டமாக கொண்டாடிட்டு இருந்தாங்க, அதே இடத்தில் அங்க சின்மயி வந்திருந்தால் இந்த வன்மம் பிடிச்ச முற்போக்கு கூட்டம் அவங்க மேல வன்மத்தை காட்டி இருக்கும்.
ஒரு பொது இடத்தில் ஒரு பாலியல் குற்றவாளி சகல மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார், அதே இடத்தில் பாதிக்கப்பட்ட பெண் கேலி கிண்டல் அழிவுக்கு உள்ளாக்கப் பட்டு இருப்பாங்க, என்ன மாதிரியான மட்டமான முற்போக்கு சமூகம் தெரியலையே என வலைதளவாசி தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த சின்மயி, ஒரு பெண்ணாக இருந்தால் தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்க, இல்லையென்றால் ஊரை விட்டு போயிருங்க உங்களுக்கு இங்க பாதுகாப்பு எல்லாம் கிடையாது.
அரசியல்வாதிகள் ஆதரவு கொடுப்பதால் தான் இந்த நிலைமை, இந்த மாதிரி ஆளுங்க கையில் சிக்காமல் இருக்கணும்னு மட்டும் வேண்டி கொள்கிறேன், இப்படிப்பட்ட பாலியல் குற்றவாளிகளை கொண்டாடும் சமுதாயமும் மக்களும் கூடிய விரைவில் வேரோடு அழிந்து ஒரு புது சமுதாயம் உருவாக வேண்டும் என்று வேண்டுகிறேன். என்ன விடுங்க நான்கு பெண்கள் ஓப்பனாக வந்து இந்த ஆளு இப்படித்தான்னு சொன்னாங்களே,
அதுக்கப்புறமும் இவருக்கு ஆதரவு தருகின்றவர்களுக்கு ஒரு கேள்வி உங்க வீட்டுப் பெண்களை பாதுகாப்பா வெச்சி இருக்கீங்களா இல்ல.? என மிக கடுமையாக பதிலளித்துள்ளார் பின்னணி பாடகி சின்மயி, சமீபத்தில் கவிஞர் வைரமுத்து எந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் பின்னணி பாடகி சின்மயி மிக கடுமையாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.