காதல் கணவனுடன் திருமண வாழ்க்கை… ஏமாற்றத்துடன் கனவை பவதாரிணி பிரிய என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் காலமானார். 47 வயதான பவதாரணி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர், அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இளையராஜாவின் குடும்பத்தினர் எப்படியாவது பவதாரிணியை காப்பாற்றி விட வேண்டும் என போராடி வந்த நிலையில், இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சைக பெற்று வந்த பவதாரிணி அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

தற்போது பாவதாரிணியின் சொத்து மதிப்பு மட்டுமே 300 முதல் 350 கோடி ரூபாய் வரை சொத்துக்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. சிறு வயதிலேயே பின்னணி பாடகியாக மாறிய பவதாரிணி பாடல் பாடுவது மட்டுமில்லாமல், சுமார் 10 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’ ‘மை பிரண்ட்’ , ‘பிர் மிலேங்கே’ ஆகிய இந்திப் படங்களுக்கும் தமிழில் ‘இலக்கணம்’, ‘அமிர்தம்’ உட்பட சில படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் பிரபல பத்திரிகையாளர் ராமசந்திரனின் மகன் ஆர். சபரிராஜ் உடன் பவதாரிணியின் திருமணம் கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்றது. சென்னையில் சினிமா பிரபலங்கள் பங்கேற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெற்றது. சபரி ராஜன் ஹோட்டல் பிஸ்னஸ் செய்து வருகிறார். விளம்பர நிர்வாகியும் கூட.

கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு இருந்தும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ரகசியமாக மறைத்து வைத்துக் கொண்டு மாநாடு படத்திற்கு பாட்டு பாடுவது, சில படங்களுக்கு இசையமைப்பது என இயங்கிக் கொண்டிருந்தார் பவதாரிணி. ஆனால், திடீரென மகள் பவதாரிணியின் மரணம் இளையராஜாவை சுக்கு நூறாக உடைத்து விட்டது. இளையராஜா பொதுவாகவே காரர் பிடித்த நபர், ஆனால் அவர் சிரித்த முகத்துடன் இருப்பது அவர் செல்ல மகள் பவதாரிணி உடன் தான்.

இந்நிலையில் பவதாரிணியின் குடும்ப வாழ்க்கை பலருக்கும் தெரியாது. பிலிமாலயா என்கிற வார இதழை நடத்தி வந்தவர் எஸ்.என். ராமச்சந்திரன். அவரின் மகன் சபரி ராஜ் மற்றும் பவதாரிணி இருவரும் காதலித்து வந்த நிலையில், இந்த காதலுக்கு தந்தை இளையராஜா என்ன சொல்ல போகிறார் என குடுமபத்தினர் ஒரு வித பயத்துடன் இருந்து வந்த நிலையில், இளையராஜா மகளின் திருமணத்திற்கு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் பச்சைக்கொடி காட்ட இருவருக்கும் திருமணம் நடந்தது.

இதில், திரைப்பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. குடும்ப விழாவாக மட்டுமே அந்த திருமணம் நடந்தது. ஆனால், பவதாரிணியின் மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து அப்பாவின் வீட்டிலேயே வாழ்ந்து வந்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் கூட இருவரும் விவாகரத்து செய்யவில்லை, ஒரு மனதாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

அந்த வகையில் உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்த காதல் திருமணம் தோல்வியை தழுவி எதோ ஒரு காரணத்திற்காக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் கூட, பாவத்தரணி இறுதி காலகட்டத்தில் தன்னுடைய மனைவிக்கு புற்று நோய் உள்ளது என்று தெரிந்ததும், இன்னும் சில காலம் மனைவி உயிருடன் வாழ வைத்து விட வேண்டும் என பவதாரணி கணவர் கடுமையாக போராடி வந்துள்ளார்.

அந்த வகையில் கணவர் மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தாலும் கூட, பவதாரணி மீது சபரிராஜ்க்கு இருந்த காதல், சபரிராஜ் மீது பவதாரணிக்கு இருந்த காதல் கடைசி வரை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது