ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தை ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 திரைப்படம் பல பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ஷங்கர் இப்போது தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ராம் சரண் தேஜா மாவட்ட ஆட்சியராக நடிக்கிறார். விறுவிறுப்பாக இதன் படப்பிடிப்பு இரண்டு கட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தயாரித்து வரும் தில் ராஜுவிடம் இருந்து படத்தின் திரையரங்க, டிஜிட்டல், சேட்டிலைட் மற்றும் வெளிநாட்டு உரிமை என அனைத்தையும் 350 கோடி ரூபாய்க்கு ஜி ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.
படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 170 கோடி ரூபாய் என சொல்ல்ப்படுகிறது. கிட்டத்தட்ட இரண்டு மடங்கு லாபத்தை தயாரிப்பாளர் தில் ராஜு பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.