படு மொக்கையாக அமைந்த பொன்னியின் செல்வன்… சினிமா ரசிகர்களை ஏமாற்றும் மணிரத்தினம்.!

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, நடிகர்கள் த்ரிஷா , ஐஸ்வர்யா ராய், என சினிமா நட்சதிரங்கள் நடிக்கும் படம் பொன்னியின் செல்வன். சோழ மன்னர்களின் வரலாற்று சம்பவங்கள் அடங்கிய வரலாற்று சம்பவங்களை மய்யமாக வைத்து ஒரு வரலாற்று படமாக பொன்னியின் செல்வம் எடுக்கப்பட்டு வருகிறது, இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 500 கோடி என கூறப்பட்டது.

பாகுபலியை மிஞ்சும் அளவில் பொன்னியின் செல்வன் படம் எடுக்கப்பட்டு வருவதாக ஓவர் பில்டப் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த டீசர் வெளியிட்டு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக யார் வந்துள்ளார்கள் என எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு, அந்த படத்தில் நடித்த நடிகர் விக்ரம் தீடிர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,

ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ள வில்லை, இது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கூட அந்த படத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் டீசரில் காஸ்ட்யூம் டிசைன், ஆர்ட் ஒர்க் அனைத்தும் மிக மோசமாக இருக்கிறது. ரியாலிட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக சண்டைக் காட்சிகளில் வெறும் 50 முதல் 100 க்கு உட்பட்ட நபர்கள் மட்டும் சண்டை போடுகின்றனர்.

இப்படி மிக குறைந்த நபர்கள் சண்டையிடுவது, ஒரு போர்க்களத்தில் சண்டையிடுவது போன்ற உணர்வு அதை பார்ப்பவர்களுக்கு வரவில்லை. பொன்னியின் செல்வன் டீசரில் பிரம்மாண்டம் மிஸ் ஆகிறது. படத்தின் மேக்கிங் ஸ்டைல் காலாவதியானது போன்று உள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் வெளியான பின்பு, இதற்கு முன்பு வெளியான பொன்னர் சங்கர், ருத்ரமாதேவி போன்ற படங்களுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

12 வருடங்களுக்கு முன்பு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்துடன் பொன்னியின் செல்வன் டீசரை ஒப்பிடும்போது, அந்தப் படத்தின் ப்ரொடக்சன் லெவல் இதைவிட பிரம்மாண்டமாகவும் இருந்தது. அது போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு பொன்னியின் செல்வன் டீசர் அவர்களை திருப்தி படுத்தவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது, கலர் பேலட் அனைத்தும் ஹிந்தி சீரியல் போன்று தான் டீசரில் உள்ளது.

படத்தின் ஒளிப்பதிவு சுமாராகத்தான் இருக்கிறது. பொன்னியின் செல்வன் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது என்கிற விளம்பரத்தை நம்பி எதிர்பார்த்த மக்களுக்கு டீசர் மிகுந்த ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது. அதனால் இந்த படத்தில் பிரம்மாண்டமான சண்டை. விபிஎக்ஸ் இதெல்லாம் பொன்னியின் செல்வன் படத்தில் இல்லை என்பது டீசரை பார்த்தவர்களுக்கு தெரியவந்துள்ளது.

சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி வெற்றியராமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் படத்தின் வெற்றிக்கு காரணம், அந்த படத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஃபர்ஸ்ட் லுக், டைட்டிலின் ஃபாண்ட் சைஸ் என எல்லாமே அற்புதமாக செய்திருந்தார்கள். ஆனால் பொன்னியின் செல்வனின் வி எப் எக்ஸ் அனைத்தும் எதோ சிறிய பட்ஜெட்டில் எடுத்த படத்துக்கு செய்தது போல் உள்ளது. கல்கி கதையில் இருக்கும் குவாலிட்டி போன்றே திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருப்பார்கள், ஆனால் பொன்னியின் செல்வன் டீசர் மக்கள் எதிர்பார்த்த அளவு இல்லை என்பது தான் உண்மை.

தன்னை காப்பாற்ற பின்வாசல் வழியே நுழையும் ரஜினிகாந்த்… தஞ்சை பெரிய கோவிலில் என்ன இருக்கு தெரியுமா.?