மாவீரன் படத்தின் தலைப்புக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்த ஒரு தொடர்பு இல்லாமல் இந்த படத்தின் கதை நகர்கிறது. சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கார்ட்டூன் வரைகின்ற ஓவியராகவருகிறார், அவருடைய தாய் ஒரு போராளி ஆனால் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கோழையாக வருகிறார். தாய் ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் குடிசையில் வாழ்கிறார் பின்பு அரசாங்கம் அந்த குடிசைகளை அகற்றிவிட்டு, அங்கிருக்கின்றவர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகளை ஏற்பாடு செய்கிறது.
ஆரம்பத்தில் குடிசை வீட்டை காலி செய்ய மாட்டேன் என அடம் பிடிக்கிறார் சிவகார்த்திகேயன் தாயார். ஆனால் சிவகார்த்திகேயன் நமக்கு அரசாங்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கொடுக்கிறது என சமாதானம் செய்து தன்னுடைய தாயையும் சகோதரியும் அங்கே அழைத்து செல்கிறார்.ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகள் தரமாக கட்டப்படவில்லை சுவர்கள் இடிந்து விழுகிறது, கதவுகள் சரியாக மூடப்படவில்லை.
இப்படி அந்த கட்டிடத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதால் அந்த கட்டிடம் தரமாக கட்டப்படவில்லை என மக்கள் கட்டிடம் தில் உள்ள குறைபாடுகளை சொன்னால் அந்த கட்டிடத்தின் கட்டிய அதிகாரி ஓசியில் கொடுத்த வீடு தானே, இதில் என்ன உங்களுக்கு தரம் வேண்டும் என்று மக்களை கேவலப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள். இந்த கட்டிடத்தை கட்டியவர் அமைச்சராக வரும் நடிகர் மிஷ்கின்.
சிவகார்த்திகேயன் தாய் சரிதா கட்டிடத்தில் உள்ள முறைகேடுகள் பற்றி அமைச்சர் மிஸ்கினிடம் சரமாரியாக தொடர்ந்து கேள்வி கேட்டு வருகிறார். இருந்தும் சிவகார்த்திகேயன் தாயை சமாதானம் செய்து சகித்துக் கொண்டு போவோம், அமைதியாக இருப்போம் என்று தெரிவித்து வருகிறார். இந்த படத்தில் அதிதி சங்கர் எதற்கு நடித்தார் என்று படம் பார்த்தவர்களுக்கு புரியவில்லை.
அந்த விதத்தில் ஏதோ ஒரு கதாநாயகி வேண்டும் என்பதற்காக அதிதி சங்கர் படத்தில் நடிக்க வைத்துள்ளார் என்பது போல் அவருடைய காட்சிகள் சொல்லும் படியாக இல்லை. கோழையான காதலன் சிவகார்த்திகேயனை தைரியமூட்டும் அதிதீசங்கரின் காட்சிகள் படு மொக்கையாக இருக்கிறது .இந்நிலையில் அதிதி சங்கர் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான விருமன் படத்தில் நடித்து மிகப்பெரிய பாராட்டைப் பெற்றிருந்தார்.
ஆனால் மாவீரன் படத்தில் அவரின் நடிப்பு பேசும்படியாக இல்லை. மாவீரன் படத்தில் மிஸ்கின் நடிப்பு பாராட்டு படியாக இருந்தாலும் சில காட்சிகள் பார்ப்பவர்களுக்கு புரியாமல் ஒரு குழப்பம் நீடிக்கும் வகையில் உள்ளது. அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழும் காட்சி படம் பார்க்கின்ற அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. அந்த அளவு இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் தன்னுடைய வேலையை மிக சிறப்பாக செய்துள்ளார்.
அதில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து காட்சியை மிக அருமையாக படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர். சிவகார்த்திகேயன் இடைவேளைக்கு முன்பு மேலே பார்த்து தொடர்ந்து பேசும் வசனங்கள் எல்லாம், படம் பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய தோய்வை ஏற்படுத்துகிறது. இந்த படத்தின் கதை வசனம் அனைத்துமே சொல்லும் படியாக இல்லை, அந்த அளவிற்கு இயக்குனர் கதையில் கோட்டை விட்டுவிட்டார் என்றே சொல்லலாம்.
மொத்தத்தில் ஏற்கனவே தோல்வியை ரஜினி நடித்த மாவீரன் படத்தின் அதே தலைப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளது எதிர்பார்த்த அளவு இல்லை என்றே சொல்லலாம், மொத்தத்தில் இந்த படத்திற்கு பின்பு அதிதி சங்கரின் சினிமா வாய்ப்புகள் மிக பெரிய சரிவை கொடுத்து, ஏதோ ஆசைக்கு இரண்டு படம் நடித்தாச்சு, போய் படிச்ச டாக்டர் வேலையை பார்ப்போம் என அதிதி ஷங்கர் சினிமாவுக்கு குட் பை சொல்லும் நிலை கூட ஏற்படலாம் என்கின்றனர் படம் பார்த்தவர்கள்.