விஜய்யின் லியோ திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகின்றது. விஜய் ரசிகர்களை இப்படம் திருப்தி படுத்தினாலும் பொதுவான ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களையே லியோ பெற்று வருகின்றது. எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்றும், அர்ஜுன், சஞ்சய் தத் போன்றவர்களின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்றும் ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர். குறிப்பாக லியோ படத்தில் LCU திணிக்கப்பட்டதாகவும், எதார்த்தமாக LCU வரவில்லை என்பதும் ரசிகர்களின் விமர்சனமாக இருந்து வருகின்றது.
இப்படம் வெளியாவதற்கு முன்பாக பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியது. அந்த வகையில் நடிகர் மீசை ராஜேந்திரன் ‘லியோ’ ரிலீசுக்கு முன்பாக அளித்த பேட்டி ஒன்றில், ‘லியோ’ பட வசூல் கண்டிப்பாக ஜெயிலரை முந்தாது. நான் ஒரு லட்சம் பந்தயம் வைக்கிறேன். ஜெயிலர் வசூலை லியோ முந்தினால் என் மீசையை எடுத்து கொள்கிறேன் இவ்வாறு பேசியிருந்தார் மீசை ராஜேந்திரன். அவரின் இந்த பேட்டி விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராஜேந்திரனின் இந்த பேச்சை எல்லாம் ஓரம் வைத்து விட்டு தற்போது ‘லியோ’ பட கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில் தற்போது மீண்டும் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் மீசை ராஜேந்திரனிடம், நேர்காணல் ஆரம்பிக்கும் போதே ட்ரிம்மர் மிசினை கொண்டு வந்து காண்பித்து தக் லைப் செய்து விட்டார் தொகுப்பாளர். அதனை தொடர்ந்து பேசிய ராஜேந்திரன், விஜய் சூப்பராக நடித்து விட்டார். ஆனால் எனக்கு படம் பிடிக்கவில்லை. ‘லியோ’ மொத ஆயிரம் வசூலிக்கட்டும். அதை விஜய் சாரே அவர் வாயலாயே சொல்லட்டும். நான் மொத ஆள அவர் கால்ல போய் விழுந்துறேன்.
ஜெயிலர் வசூலை லியோ முந்தாது. ஐந்து நாள் கழிச்சு ரெண்டு வசூலையும் கம்பேர் பண்ணி என்கிட்ட வந்து கேளுங்க. இதே இடத்துல நான் வந்து பேசுறேன். 2.0 டிஜிட்டல் ரைட்ஸ் எல்லாம் சேர்த்து ஆயிரம் கோடி வரை வசூலித்தது. ஜெயிலரும் அதே போல் கலெக்ட் செய்தது. அந்த வசூலை ‘லியோ’ தொடாது. ஒருவேளை ஜெயிலர் வசூலை ‘லியோ’ பீட் செய்து விட்டால் நான் என் மீசையை எடுத்து கொள்கிறேன் என மறுபடியும் தற்போதை பேட்டியில் சவால் விட்டுள்ளார் ராஜேந்திரன்.
அதுமட்டுமின்றி லியோ எல்சியூ படம் இல்லைங்க சரியான குப்பை படம். அதை பார்த்துட்டு ஐசியூவுக்கு போகிற நிலைக்கு ஆளாகி விட்டேன். கண்டிப்பா ஜெயிலர் படத்தை முறியடிக்காது. படம் ஃபிளாப் தான் என அந்த பேட்டியில் மீண்டும் விஜய் ரசிகர்களை வம்பிழுத்து இருக்கிறார் மீசை ராஜேந்திரன். நான் லியோ படத்தை பார்க்கும் போது அங்கே இருந்தவர்கள் 1000 கோடி 2000 கோடினு எல்லாம் கத்துனாங்க. ஆனால், லியோ படம் கண்டிப்பாக 1000 கொடியாய் நெருங்காது. லியோ படம் 800 கோடி வசூல் ஆகிவிட்டது என்று சொல்லட்டும் விஜய் சாரே என் மீசையை வந்து எடுக்கட்டும் என்று கூறியுள்ளார்.
அவரின் இந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது. ‘லியோ’ படத்திற்கு உலகளவில் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் இப்படம் ரூ. 140 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலமாக ‘லியோ’ படம் இந்தாண்டில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிகம் வசூலித்த படமாக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது
இருப்பினும், இரண்டாவது நாள் அவ்வளவு வலுவாக இல்லை. 2-வது நாளில் வசூல் ரூ. 35 கோடியாக குறைந்து 45% சரிவை சந்தித்தது. இதனால், உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்த ரஜினியின் ஜெயிலரை லியோவால் முறியடிக்க முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் லியோ படம் பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.
மூன்றாவது நாளில் தமிழகத்தில் ரூ.26 கோடி வசூல் என மதிப்பிடப்பட்டுள்ளது. லியோ மற்ற பகுதிகளிலும் நல்ல வருமானம் ஈட்டுகிறது, கேரளாவில் இருந்து சுமார் ரூ 7 கோடியும், ஆந்திரா தெலுங்கானா பகுதிகளில் இருந்து ரூ 5 கோடியும், கர்நாடகாவிலிருந்து ரூ 5.50 கோடியும் ஈட்டி வருகிறது. இதன் மூலம் விஜய்யின் லியோ 200 கோடி வசூலைத் தொட்ட 7-வது தமிழ் திரைப்படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.