லியோ தோல்வி… என் மகனை வெச்சு செய்ய விட்டிட்டிங்களே… என்ன சொல்ல போகிறார் விஜய் பற்றி சந்திரசேகர்..

0
Follow on Google News

நடிகர் விஜய் கோலிவுட்டின் முன்னணி நடிகர் ஆவார். மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் விஜய் படத்தை தயாரிப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு முன் வந்து நிற்கின்றன. அந்தளவிற்கு வசூல் மன்னனாக வலம் வரும் நடிகர் விஜயை தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகப்படுத்தியதே அவரது அப்பா சந்திர சேகர்தான். நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய், உருவகேலி செய்யப்பட்டு கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார்.

ஆரம்பத்திலேயே மோசமான அனுபவங்களைப் பார்த்துத் துவண்ட நடிகர் விஜய்க்கு அப்பா சந்திரசேகர் உறுதுணையாக இருந்திருக்கிறார். இதனாலேயே எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், காதில் போட்டுக் கொள்ளாமல் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்கத் தொடங்கியுள்ளார் நடிகர் விஜய். விஜயின் அப்பா சந்திரசேகர் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.

சினிமாவில் முக்கிய நுட்பங்களை அறிந்திருந்த இயக்குனர் சந்திர சேகர், தன் மகனை ஸ்கிரீனில் எப்படி காட்ட வேண்டும்? எப்படியெல்லாம் காட்டக் கூடாது என்பதை முழுவதுமாக திட்டமிட்டு விஜயை தன் படங்களில் நடிக்க வைத்தார். மகனுக்காக தந்தை எடுத்த முயற்சி ஒருபோதும் வீணாவதில்லை என்பதுபோல, இருவரின் விடாமுயற்சியின் விளைவாக விஜய் இந்தளவு ஒரு மாஸ் ஹீரோவாக வளர்ந்திருக்கிறார் . இன்று நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால், முழு பெருமையும் சந்திரசேகரையே சேரும்.

சினிமாவில்ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற மகனின் கனவை நிறைவேற்றுவதற்காக, ஆரம்பகாலத்தில் விஜயோடு சேர்ந்து தானும் அரும்பாடு பட்டிருக்கிறார் என்பதுதான் உண்மை. இப்போது சந்திரசேகர் கண்முன்னே விஜய் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். சந்திரசேகர் இன்றுவரை விஜயின் படங்களை ஒரு அப்பாவாக பார்க்காமல், இயக்குனராகவேதான் பார்ப்பாராம். அதனாலேயே நடிகர் விஜய் படத்தில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்து அதை விஜயிடமே கூறுவாராம்.

இதனால் இருவருக்கும் இடையே பலமுறை மனக்கசப்பு ஏற்படுமாம். இதை சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இப்படிதான், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன போது, சந்திரசேகர் பேட்டி அளித்திருந்தாராம். அதில் அவர் ‘ஒரு படத்தில் ஸ்கீரீன் ப்ளே என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நன்கு அறிந்தவன் நான். அதுவும் விஜய் என் ஹீரோ. நான் உருவாக்கிய ஹீரோ விஜய். அவரை எங்கு கொண்டுவந்து வச்சிருக்கேன்.இப்படி ஸ்கிரீன் ப்ளே பண்ணத் தெரியாமல் போய் கவுத்திட்டீங்களே.’ என மிகவும் வருந்தி புலம்பியிருந்தாராம்.

பீஸ்ட் படத்திற்கே, விஜயை நினைத்து வருந்திய அப்பா சந்திர சேகர், இப்போது லியோ படத்தை பார்த்துவிட்டு பேட்டி கொடுத்தார் என்றால் அதே போன்ற இதே கருத்தைத்தான் முன்வைத்திருப்பார் என்று பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சில் விமர்சகராக இருக்கும் அந்தனன் சமீபத்தில் கூறியிருக்கிறார்.