நயன்தாரா ஆணவத்துக்கு விழுந்த அடி… சுந்தர் சி செய்த தரமான சம்பவம்…

0
Follow on Google News

நயனதாரா எந்த அளவுக்கு சினிமாவில் உச்சம் நட்சத்திரமாக இருந்து வருகிறாரோ அதே அளவு அவருக்கு ஆணவம் உண்டு என்கிறது சினிமா வட்டாரங்கள். அந்த வகையில் நயன்தாராவை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளரும், இயக்குனரும் படாத பாடு பட்டு விடுவார்கள், ஆனால் அதே ஆணவத்தை சுந்தர்.சி யிடம் காண்பித்தால் சும்மா இருப்பாரா.

இந்த நிலையில் ஐசரி கணேசன் தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை சுந்தர் சி இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த படம் தொடங்கப்படாமலே இருக்கிறது. அதாவது மூக்குத்தி அம்மன் 2 படத்தை முழு முதலீடு செய்து எடுக்க இருக்கிறார் தயாரிப்பாளர் ஐ சரி கணேசன், இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே மூக்குத்தி அம்மன் ஒன்று படத்தில் நடித்த நயன்தாரா இரண்டிலும் நடிக்கிறார்.

அப்படி இருக்கையில் இந்த படத்தில் கால் சீட்டுக்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுக்க இருக்கும் நயன்தாரா, அதற்கு பதிலாக மூக்குத்தி அம்மன் 2 படத்தில் தன்னை ஒரு தயாரிப்பாளராக இணைக்க வேண்டும், மேலும் இந்த படத்தில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருக்கிறார் நயன்தாரா.

இந்த கோரிக்கையை ஐசரி கணேசன் ஏற்றுக்கொண்டு நயன்தாராவை சம்பளத்திற்கு பதிலாக இந்த படத்தில் ஒரு தயாரிப்பாளராக இணைத்துக்கொண்டு, அவருடைய தயாரிப்பு நிறுவனத்தையும் படத்தின் அறிவிப்பின்போது வேல் இன்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் மூக்குத்தி அம்மன் எண் 2 என்று வெளியிட்டு இருந்தன.

இந்த நிலையில் டைட்டில் வெளியான பின்பு படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகளை சுந்தர் சி தொடங்கி இருந்த நிலையில், அந்த படத்திற்கான கால் சீட்டை கொடுக்காமல் இழுத்தடித்து வந்திருக்கிறார் நயன்தாரா. இந்த நிலையில் நயன்தாரா தற்பொழுது கைவசம் பெரிதா படம் ஏதும் இல்லாமல் வீட்டிலேயே தான் முடங்கி இருக்கிறார்.அதுவும் கணவனுடன் அடிக்கடி எங்காவது சுற்றுலா சென்று அங்கே புகைப்படம் எடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்படி பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நயன்தாரா இன்னும் கால் சீட் கொடுக்காமல் எப்படி மற்ற இயக்குனர்களிடம் ஆணவத்துடன் நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கு, அதே ஆணவத்தை சுந்தர் சி இடமும் காட்டி இருக்கிறார். ஆனால் சுந்தர் சி ஒரு சீனியர் இயக்குனர் மட்டுமல்லாமல், சமீபத்தில் மத கஜராஜா என்கின்ற மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர்.

அந்த வகையில் தயாரிப்பாளர் ஐ சரி கணேசனிடம் எப்ப படத்தை ஸ்டார்ட் பண்ணலாம், என்னாச்சு என்று கேட்கவும், அதற்கு இன்னும் நயன்தாரா கால் சீட்டை உறுதி செய்யவில்லை என ஐசரி கணேசன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சுந்தர் சி இதற்கு மேல் என்னால் பொறுமையாக காத்திருக்க முடியாது, நயன்தாரா எப்போது வருவாரோ வரட்டும், அதற்குள் நான் விஷாலை வைத்து வேறு ஒரு படத்தை இயக்கப் போகிறேன் என்று கிளம்பி விட்டாராம் சுந்தர் சி.

மேலும் நயன்தாரா கால் சீட் கொடுத்தால், காத்திருக்க சொல்லுங்கள் விஷால் படத்தை முடித்து விட்டு வருகிறேன் என சுந்தர் சி தெரிவித்து இருக்கிறார். ஒரு படத்தை அறிவித்த பின்பு மாத கணக்கில் கால் சீட் கொடுக்காமல் காக்க வைத்து ஆணவத்துடன் இருந்த நயன்தாராவின் மூக்கை உடைக்கும் வகையில் மற்ற புது இயக்குனர் போன்று நயன்தாரா எப்படா கால் சீட் கொடுப்பார், எப்படா படப்பிடிப்புக்கு வருவார் அவரை வைத்து படம் எடுக்கலாம் என்று காத்திருக்காமல், நான் வரும் வரை நயன்தாராவை காத்திருக்க சொல்லுங்கள் என்று ஒரே போடாக போட்டு நயன்தாராவின் ஆணவத்திற்கு சம்பட்டி அடி கொடுத்து உள்ளார் சுந்தர் சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here