ஆர்யா அடுத்ததாக இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி இருந்த டெடி திரைப்படம் ஒரு ஸ்லீப்பர் ஹிட்டாக அமைந்தது. அதனால் அந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக அப்போதே அறிவிப்பு வெளியானது.
இடையில் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் படத்தை தானே தயாரிக்க முடிவு செய்துள்ளார் ஆர்யா. தனது ஷோ பீப்பிள் நிறுவனத்தை பல ஆண்டுகளுக்குப் பின் தூசு தட்டி எடுத்து இந்த படத்தைத் தயாரித்து நடிக்கிறார்.
இந்த படத்துக்கு கேப்டன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. சக்தி சௌந்தர்ராஜன் ஸோம்பி, ஸ்பேஸ், ஆஃப்டர் டெத் என வித்தியாசமான கதைக்களங்களில் படம் இயக்குபவர். அதனால் இந்த படம் எதைக் கதைக் களனாக கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.