சென்னை பல்லாவரத்தில் சாதாரண காலேஜ் படிக்கும் பெண்ணாக இருந்த சமந்தா, எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி ஒற்றை ஆளாக சினிமாவில் நுழைந்து இன்று தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஜோடியாக நடித்து வெளியான படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகி கொண்டிருந்த சமயம் அது. இருவருக்கும் இடையே சினிமாவில் மட்டுமல்லாமல் ரியல் வாழ்க்கையிலும் கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட் ஆனது.
நான்கு வருடங்களாக காதலித்து வந்த இந்த காதல் ஜோடி இருவீட்டாரின் சம்மதத்துடன் அக்டோபர் 6, 2017 அன்று கோவாவில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.பின்னர் 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்துவிட்டதாக கூட்டாக அறிவித்தனர்.
![](https://dinaseval.com/wp-content/uploads/2025/02/nagarjuna-samantha-1024x575.jpg)
இந்த நிலையில் சமந்தா ஒரு வெப் சீரியஸில் மிக கவர்ச்சியாக நடித்ததாகவும், அதற்கு நாகர்ஜுனா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தால் நீங்களும் சினிமாவில் இருந்து வந்தவர்கள் தானே, இதில் என்ன தவறு இருக்கிறது என சமந்தா விவாதம் செய்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் நாகசைந்தய்யா சமந்தா இருவருக்கும் விவாகரத்து ஆனது என பரவலாக பேசப்பட்டது.
மேலும் பணத்திற்காக நாகசைந்தய்யாவை திட்டமிட்டு தன்னுடைய காதல் வலையில் விழ வைத்த சமந்தா தற்பொழுது விவாகரத்து செய்து மிகப் பெரிய தொகையை பெறுவதற்கு தயாராகி விட்டார் என தெலுங்கு மீடியாக்கள் சமந்த விவாகரத்து குறித்து பரபரப்பாக செய்திகள் வெளியிட. அது மட்டும் இன்றி சென்னையில் பல்லாவரத்தில் உள்ள சமந்தாவின் வீட்டை வீடியோவாக எடுத்து இப்படி நடுத்தர குடும்பத்தில் வசித்தவர் தான் சமந்தா.
ஒரு மஞ்சப்பையை எடுத்துக் கொண்டுதான் காய்கறி வாங்க கடைக்கு செல்வார், அப்படி ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த சமந்தா நாகசைந்தய்யா திருமணம் செய்தது பணத்திற்காக தான், தற்பொழுது விவாகரத்து செய்து பெரும் கோடி ஜீவனாம்சம் பெறுவார் என்கின்ற ஒரு பரபரப்பாக சமந்தா மீது தெலுங்கு மீடியாக்கள் சமந்தாவை மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்தது.
இதனை தொடர்ந்து நாகசைந்தய்யா – சமந்தா விவாகரத்து பெற்று பிரிந்த போது சமந்தா ஜீவனாம்சமா எத்தனை கோடி கேட்க இருக்கிறார் என பலரும் எதிர்பார்த்து இருக்கு, நாகசைந்தய்யா உடன் சமந்தா வாழ்ந்ததற்காக சமந்தாவுக்கு சுமார் 200 கோடி ரூபாய் நாகர்ஜுனா குடும்பத்தினர் கொடுக்க முன் வந்த போதும் நான் பணத்திற்காக நாகசைந்தய்யாவை காதலிக்கவில்லை நான் மனதார காதலித்தேன் உங்கள் பணம் எனக்கு வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு சமந்தா வந்தார்.
இந்நிலையில் தற்பொழுது நாக சைதன்யாவுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு வெற்றி கிடைத்தது. சாய் பல்லவியுடன் இணைந்து நடித்த தண்டேல் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட நாகார்ஜுனா பேசுகையில், தண்டேல் படத்தின் வெற்றிக்குக் காரணம் தனது புதிய மருமகள் சோபிதா தான் என தெரிவித்தவர், சோபிதா தனது வீட்டிற்கு மருமகளாக வந்த நேரத்தில் நாக சைதன்யாவுக்கு தண்டேல் வடிவில் வெற்றி கிடைத்தது என நாக அர்ஜுன் பேசியது, அப்படியானால் இதற்கு முன்பு நாக சைதன்யா படம் ஓடாமல் போனதற்கு சமந்தா உங்கள் வீட்டு மருமகளான வந்தது தானா.? சமந்தா ராசி இல்லாதவர் என்று மறைமுகமாக நாக அர்ஜுன் பேசுகிறாரா என சமந்தா ரசிகர்கள் கடுமையாக நாக அர்ஜு்னை விமர்சனம் செய்து வருவது குறிப்பிடதக்கது.