கல்லீரல் புற்றுநோய் காரணமாக, இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி, பின்னணி பாடகி, இசையமைப்பாளர் என இசை துறையில் ஒரு பெண்ணாக சாதித்த பவதாரணி இறக்கும் தருவாயில் கூட, 3 படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகி பணியாற்றி வந்தார். அப்பா, அண்ணன், தம்பி இசையில் மட்டுமே பாடல்களை பாடாமல், பிற இசை அமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார்.
இசைஞானி இளையராஜா வீட்டில் எப்போதும் இசை சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும், அப்போது இளையராஜா காத்திக் ராஜா, யுவுன் சங்கர் ராஜாவிற்குத் தான் இசையை சொல்லிக் கொண்டு இருப்பார். ஆனால், பவதாரணிக்கு இசை கற்றக்கொடுக்கவில்லை என்றாலும் இவருக்குத்தான் இசையில் அதிக ஆர்வம் இருந்தது. இந்த நேரத்தில் தான் மை டியர் குட்டிசாத்தான் படத்தில் பவதாரணி ஒரு பாட்டுபாடினார்.
அதன் பிறகு பலத் திரைப்படங்களில் பாடிய பவதாரணி, பிரபுதேவா நடித்த ராசாய்யா படத்தில் காதல் வானிலேயே என்ற பாடலை பாடினார். அதன்பின் பாரதி, தாமிரபரணி, புதிய கீதை உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை பாடியுள்ளார். பவதாரணி பாடகியாக மட்டுமில்லாமல், ஒரு சில திரைப்படத்திற்கு இசையும், இசை ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளார். பவதாரணி எஸ்.என். ராமச்சந்திரன் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவரின் இல்லற வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையாததால், பவதாரணி கணவரை விட்டு பிரிந்து, தந்தை இளையராஜாவுடனே வசிந்து வந்தார். இவரின் மனைவி என்பதைவிட இளையராஜாவின் மகள் என்பதில் பவதாரணி மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். 47 வயதான பவதாரணியின் ஒரே வருத்தம் குழந்தை இல்லை என்பது மட்டும் தான். கடந்த ஓராண்டுக்கு முன் பவதாரணிக்கு பித்தப்பையில் கல் இருந்துள்ளது.
அதற்காக சிகிச்சை எடுத்த போது அது, புற்றுநோயாக மாறி, சிறுநீரகத்திற்கும் பரவிவிட்டது. இதற்காக பல சிகிச்சைகள் செய்த போதும் அதில் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. அனைத்து மருத்துவர்களும் கைவிட்ட நிலையில், கடைசியாகத்தான் இலங்கையில் புற்று நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு, சிகிச்சை எடுக்க சென்றார். ஆனால், அது பலன் அளிக்காமல் உயிரிழந்துவிட்டார்.
அது மட்டும் இன்றி பவதாரணி ஒரு முறை யுவன் சங்கர் ராஜாவிற்காக இளையராஜாவிடம் சண்டை போட்ட சம்பவத்தை பிரபல பத்திரிகையாளர் வெளியிட்டுள்ளார். யுவன் சங்கர் ராஜாவுக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. அதாவது இரண்டு திருமணம் செய்து கொண்ட யுவன் சங்கர் ராஜாவுக்கு இரண்டு திருமணமும் பிரச்சனையாகி விவாகரத்து பெற்று பிரிந்தார்.
மூன்றாவதாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள யுவன் சங்கர்ராஜா முடிவு செய்து, திருமணத்தின்போது யுவன் முஸ்லிம் மதத்திற்கு மாறுவதற்கு குறிப்பாக அவருடைய தந்தை இளையராஜா தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. தந்தையின் எதிர்ப்பின் காரணமாக யுவன் திருமணம் நடைபெறுமா.? என்கிற குழப்பத்தில் யுவன் இருந்து வந்த நிலையில், பவதாரணி தம்பி உனக்கு நான் இருக்கேன் என்று உறுதுணையாக இருந்துள்ளார்.
உடனே தந்தை இலையராஜாவிடம் தம்பி யுவன் சங்கர் ராஜாவுக்காக சண்டையிட்டு, தம்பிக்கு என்ன புரிகிறதோ அதை செய்யட்டும், அவருடைய சந்தோசத்தை பாருங்க டாடி என்று பக்குவமாக இளையராஜாவுக்கு எடுத்து சொன்ன பவதாரிணி, ஒரு வழியாக தந்தை இளையராஜாவிடம் சம்மதமும் பெற்று தந்துள்ளார். அது மட்டுமின்றி இஸ்லாமிய முறை படி நடந்த தம்பி யுவன் சங்கர் ராஜாவின் மூன்றாவது திருமணத்திற்கு இளையராஜா குடும்பத்தினர் பெரும்பாலும் வராத நிலையில் பவதாரிணி முன்னிற்று மாப்பிளை வீட்டின் சார்பில் நடத்தியும் வைத்துள்ளார் பவதாரிணி.