சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமான ஜேம்ஸ் வசந்தன் பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வரக்கூடியவர். இந்நிலையில் சமீபத்தில் தமிழ் சினிமா கொண்டாடக்கூடிய இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜாவை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார் ஜேம்ஸ் வசந்தன்.
பேட்டி ஒன்றில் ஜேம்ஸ் வசந்த் பேசுகையில், இளையராஜா மாதிரி ஒரு மட்டமான ஆளை பார்க்கவே முடியாது, இளையராஜா ஒரு மனிதனாக மிகவும் மட்டமான ஒரு நபர், ஏனென்றால் கொஞ்சம் கூட முதிர்ச்சி இல்லாமல். ஒரு சாதாரண ஆளாக இருந்தால் நாம் இந்த அளவுக்கு அவரை விமர்சனம் செய்ய தேவையில்லை. சினிமா துறையில் பலர் அவரை சாமி என்று அழைப்பார்கள், நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் சாமி சாமி என்று தான் இளையராஜாவை அழைப்பார்.
ஏனென்றால் அந்த அளவுக்கு இளையராஜா ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர். ஆனால் ஆன்மீகத்தின் அதிக ஈடுபாடு கொண்டிருந்தாலும் வெளியில் மிகவும் அசிங்கமாக கூடியவர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கிறிஸ்துவ மதத்தை பற்றி தவறாக பேசி அவர்களின் நம்பிக்கையை அசிங்கப்படுத்துவது போல் இளையராஜா பேசியிருந்தார். இவர் முட்டாள் போன்று அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் ஏசு கிறிஸ்து வாழ்ந்தாரா.? வந்தாரா.? உயிர்த்தெழுந்தார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.
இது அவருக்கு தேவையா.? என்ன சொல்ல வருகிறாராம், ரமண மகரிஷி ஒருத்தர் தான் செத்து உயிர்த்தெழுந்தார, கொஞ்சமாவது ஆன்மீக புரிதல் உள்ளவன் முதிர்ச்சி உள்ளவன் இப்படி பேசுவானா, ஒரு பண்பு உள்ளவன் எவனாவது இப்படி பேசுவானா, கோடிக்கணக்கான மக்கள் இயேசு கிறிஸ்துவை நம்புகிறார்கள், அப்படியானால் அத்தனை நபர்களையும் நாம் காயப்படுத்த வேண்டுமா.?
ஏனென்றால் இளையராஜா ஒன்றும் வரலாற்று ஆசிரியர் கிடையாது அத்தனை பெயரையும் கேவலப்படுத்த ஒரு ஈன புத்தி இருக்கே.? அதாவது நீங்கள் எல்லாம் தப்பு, நான் தான் சரி என்று என்று நினைக்கிற அந்த எண்ணம் இருக்கு இல்ல, அதனால தான் அவரை மட்டமான ஆட்கள் என்று சொல்கிறோம் என ஜேம்ஸ் வசந்த் ஒருமையில் இளையராஜாவை மிக கடுமையாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இளையராஜா மீது ஜேம்ஸ் வசந்தனுக்கு எதற்கு இந்த கோபம், என்கிற தகவல் வெளியாகியுள்ளது. சுப்பிரமணியபுரம் படத்தில் வரும் ஒரு காட்சியில் சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் என்கிற பாடல் ஒழிக்கும். இளையராஜா இசையில் வெளியான இந்த பாடலை இளையராஜா அனுமதி இல்லாமல் அந்த படத்தில் இடம்பெற செய்ததற்காக இளையராஜா தரப்பில் இருந்து அந்த படத்திற்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
பொது வாக ஒரு இசை அமைப்பாளருக்கு சொந்தமான பாடலை வேறு ஒரு படத்தில் பயன்படுத்தினால், அந்த பாடலுக்கு சொந்தமான இசை அமைப்பாளரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும், ஆனால் இந்த அடிப்படை கூட தெரியாமல் இளையராஜா அனுமதி இல்லாமல் சுப்பிரமணியபுரம் படத்தில் பயன்படுத்திய ஜேம்ஸ் வசந்தன், அதனால் இளையராஜா தரப்பில் இருந்து வந்த நோட்டிஸ் காரணமாக, அப்போது இருந்து இளையராஜா மீது ஜேம்ஸ் வசந்தனுக்கு வன்மம் இருந்து வந்ததாகவும், அதன் வெளிப்பாடு தான் இது போன்று இளையராஜாவை ஒருமையில் கடுமையாக ஜேம்ஸ் வசந்தன் பேசுவதற்கு காரணம் என கூறப்படுகிறது.