தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தந்தையை போலவே இசையமைப்பிலும் அசத்தியுள்ள பவதாரணி தனது தனித்தவமாக குரலின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார். பொதுவாகவே இளையராஜா விடம் நெருங்குவதற்கு தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ஒருவித அச்சத்துடன் தான் நெருங்குவார்கள்.
மேலும் இளையராஜாவிடம் பேச வேண்டும் என்றால் ஒரு தடவைக்கு பலமுறை யோசித்து தான் ஒவ்வொரு வார்த்தைகளும் பேச வேண்டும், காரணம் சட்டென்று கோபப்படக் கூடியவர் இளையராஜா. இப்படி இளையராஜாவைப் பார்த்து அனைவரும் தயக்கத்துடன் இருந்தாலும் இளையராஜா அவருடைய ஸ்டூடியோவில் இசையமைத்துக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய மகள் பவதாரணி வந்துவிட்டால் அப்படியே ஒரு குழந்தையாகவே இளையராஜா மாறிவிடுவாராம்.
இளையராஜாவை பொதுவாக பலரும் சிரித்து பார்த்திருக்க மாட்டார்கள் ஆனால் அவர் மகளுடன் சிரித்து நகைச்சுவையோடு பேசுவாரா அந்த அளவுக்கு அவர் தன்னுடைய மகள் மீது அளவற்ற அன்பும் பாசமும் வைத்திருந்தவர். இதனிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரணி, இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சையில் இருந்த நிலையில், இரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
பவதாரணி பெரிய அளவில் பாடுவதற்கு அவரது தந்தை இளையராஜா ஆரம்பத்தில் சம்மதம் தெரிவிக்கவில்லையாம். அதன் பின்பு அவரது திறமையை அவதானித்து பாடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். வீட்டின் செல்லப்பிள்ளையாகவும், அப்பா மற்றும் அண்ணன்களுக்கு இடையே அன்பு பாலமாகவும் இருந்த பவதாரணி தான், அண்ணன் சார்பாக அப்பாவிடம் சென்று எந்த காரியம் என்றாலும் பேசி சம்மதம் வாங்குவாராம்.
இவ்வாறு செல்லமாக இருந்த இவருக்கு சில ஆண்டுக்கு முன்பு கணையத்தில் கல்லடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர். பின்பு சில நேரங்களில் அவ்வப்போது வயிறுவலி ஏற்பட்டுள்ளது. இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத பவதாரணி அந்த நேரத்திற்கு சுகமளிக்கும் அளவிற்கு மருந்து, மாத்திரைகளை எடுத்துள்ளார். இதுதான் பவதாரணி செய்த மிக பெரிய தவறு என்று தற்போது கூறப்படுகின்றது.
இவ்வாறு பவதாரணி செய்தது அந்நேரத்தில் அவருக்கு சுகமளித்தாலும், புற்றுநோயை உள்ளிருந்தே வேகமாக வளர வைத்துள்ளது. நமக்கு எதுவும் நடக்காது என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டிருப்பது போலத்தான் பவதாரிணியும் நம்பி இருக்கிறார். அதனால் தான் தனக்கு வந்த சின்ன சின்ன வலி வேதனைகளை கூட அந்த நேரத்திற்கு ஏதாவது மருந்து மாத்திரைகளை எடுத்து அதை குறைந்தது அதைப் பற்றி மறந்து போயிருக்கிறார்.
நமக்கு எதுவும் நடக்காது என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டிருப்பது போலத்தான் பவதாரிணியும் நம்பி இருக்கிறார். அதனால் தான் தனக்கு வந்த சின்ன சின்ன வலி வேதனைகளை கூட அந்த நேரத்திற்கு ஏதாவது மருந்து மாத்திரைகளை எடுத்து அதை குறைந்தது அதைப் பற்றி மறந்து போயிருக்கிறார். கடைசியில் ரொம்பவும் முடியாமல் ஆன போது தான் பவதாரிணிக்கு மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்திற்கு புற்றுநோயில் நான்காவது கட்டத்தில் பவதாரணி இருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.
ஆதலால் உடம்பில் சிறிய வலி ஏற்பட்டால், அந்த வலி நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருந்தால், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு பிரச்சினை என்ன என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். தற்காலிக சுகத்திற்கு அவ்வப்போது மருந்து மாத்திரைகளை எடுக்கும் வழக்கத்தினை வைத்திருப்பவர்கள் இனி இந்த தவறை செய்யவே செய்யாதீர்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.