இந்திய சினிமாவின் மிக பெரிய இசை ஜாம்பவான் இளையராஜாவை தெரியாதவர்கள் இருக்கமுடியுமா. வயிற்று பசிக்கு உணவின்றி தவிக்கும் மக்களை தனது பாட்டால் பசியையே மறக்க செய்யும் இளையராஜாவின் பாட்டுக்கு உலகம் முழுவதும் கோடானகோடி ரசிகர்கள் உள்ளனர். சூரியன் உதித்து மறையும் வரை இளையராஜாவின் பாட்டு இல்லாத இடம் கிடையாது.
சோகமானாலும் சரி, ஜாலி மூடில் இருந்தாலும் சரி நமக்கு கம்பெனி கொடுப்பது இளையராஜாவின் பாடல்களே. ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், பாக்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்தவர். குறிப்பாக நடிகர் ராமராஜனுக்கு ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்து அசத்தியுள்ளார், அதிலும் கரகாட்டக்காரன் படத்தில் வரும் ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடல் அப்பப்பா சொல்லவா வேணும்.. இன்றும் பலரின் விருப்பமான பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
இந்திய இசையில் பல புதுமைகளை அறிமுகப்படுத்தியவர் இளையராஜா. மேற்கத்திய இசையை இந்திய இசையில் புகுத்தியவர்களில் இளையராஜாவிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. இசையில் பல்வேறு சாதனைகளை படைத்த இளையராஜா 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் இவரை தவிர்த்து இசையா என்று இருந்தது, 80ஸ் மற்றும் 90ஸ்-களில் ஜாம்பவானாக இருந்த இளையராஜா 2கே கிட்சை இம்ப்ரஸ் செய்ய முடியாது என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், தேவா, அனிருத் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் அவருக்கு பின் வந்துவிட்டனர். ஆனாலும், இளையராஜாவை தேடி செல்லும் தயாரிப்பாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் விடுதலை திரைப்படம் வெளியானது.
இப்படத்தில் இசையலைப்பாளர் இளையராஜாவின் இசை ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதி கொள்ளையடித்தது, குறிப்பாக காட்டுமல்லி பாடல் 90ஸ் முதல் தற்போதைய 2கே கிட்ஸிகளை முணுமுணுக்க வைத்தது. இதன் மூலம் அன்றும் இன்றும் என்றும் இளையராஜாவின் பாடல்கள் தான் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். எனவே, இளையராஜா தனது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்திவிட்டாராம்.
இதனால் அவரை தேடி செல்லும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் பல கோடி ரூபாய்க்கு ஒரு படத்திற்கு இசையமைக்கின்றனர். வெறும் 32 வயதில் இப்படிப்பட்ட வளர்ச்சி என திரையுலகையே வியந்து பார்க்க வைக்கும் இசையமைப்பாளர்களுள் ஒருவர்தான் அனிருத். இவர் தற்சமயம் இருக்கும் டாப் நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் போன்றோரின் படங்களில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.
அதிலும் இவருடைய பாடல்கள் எல்லாம் இளைஞர்களை குதூகலப்படுத்தும் வகையில் இருப்பது தான் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. அனிருத் ஒரு படத்திற்கு இசையமைப்பதற்கு மட்டும் 7 கோடி சம்பளம் வாங்குகிறார். இதனால்தான் இளையராஜாவும் தன் சம்பளத்தை ஒரு கோடிக்கு மாற்றியுள்ளார். ஒரு கோடி சம்பளம் கொடுத்தால் தான் பாட்டு போடுவேன், இல்லை என்றால் நடையை கட்டுங்கள் என பல தயாரிப்பாளரிடம் இளையராஜா ஸ்ட்ரிட்டாக சொல்கிறாராம்.
இவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முடியாமல் பல தயாரிப்பாளர்கள், பின்னங்கால் பிடரியில் அடிக்கும் படி தலைத்தெறிக்க ஓடி வருகிறார்களாம். காரணம் தற்போது உள்ள இளம் இசை அமைப்பாளர்களின் ஆடியோ உரிமை ரூ.20 கோடி வரை விற்றுவிடுகிறது. ஆனால், இளையராஜா இசையமைத்தால் ஆடியோ உரிமை ரூ.20 லட்சம் வரை மட்டுமே போகிறதாம்.