இளையராஜா இப்படியெல்லாம் செய்வாரா.? சம்பளம் விஷயத்தில் இளையராஜா செய்த செயல்..

0
Follow on Google News

இயக்குனர் ஸ்ரீ தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பி.வாசு. இயக்கிய முதல் பத்ம பன்னீர் புஷ்பங்கள், இந்த படத்தில் இசை அமைக்க இளையராஜாவை சந்தித்து படத்தின் படத்தின் முழு கதையையும் தெரிவித்துள்ளார் பி.வாசு. கதையை கேட்ட இளையராஜா இசையமைத்து தரவும் ஓக்கே சொல்லிவிட்டார். படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் படாத பாடு பட்டு வந்துள்ளார் பி.வாசு.

ஒரு வழியாக புதிய படம் பண்ணுவதற்கு பி.வாசு தந்தை மகனுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளார். மேலும் பன்னீர் புஸ்பம் படத்திற்கு 5 லட்சம் பட்ஜெட் என பி.வாசு தெரிவிக்க, அவருடைய தந்தை பைனாஸ் ஒருவரை ரெடி செய்து கொடுத்துள்ளார். அதன் பின்பு,பைனான்சியரை சந்தித்து, முழு கதையையும் தெரிவித்து பைனாசியரிடம் மீது பணத்தை பெற்றுள்ளார் பி.வாசு.

தன்னுடைய முதல் படமான பன்னீர் புஷ்பங்கள்’ படத்தை மொத்தமே 5 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க பிளான் செய்த பி வாசு தன்னுடைய படத்துக்கு இசை அமைக்க இளையராஜா தான் வேண்டும் என பிடிவாதமாக ஒப்பந்தம் செய்துள்ளார். அப்போது செம்ம உச்சத்தில் இருந்த இளையராஜா ஒரு படத்திற்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் இளையராஜாவிடம் உங்களுக்கு என்ன சம்பளம் தர வேண்டும் என தயங்கி தயங்கிக் கேட்டுள்ளார் பி வாசு. ஆனால், இளையராஜாவோ பாடல்களை கம்போஸ் செய்துகொடுக்கும் வரை சம்பளம் பற்றி பேசவே இல்லையாம். இறுதியாக படத்துக்கு ரீ-ரெக்கார்டிங் முடிந்து ரிலீஸாகவும் ரெடியாகிவிட்டது. இளையராஜா எவ்வளவு சம்பளம் கேட்பார் என பயந்து போய் உள்ளார் பி.வாசு..

பி.வாசு நெருங்கிய நண்பராக இருந்து வந்த கங்கை அமரனைக் கூப்பிட்டு, ‘என்ன அமரு, அண்ணன் ஒண்ணும் சொல்லல. எவ்ளோ சம்பளம்னு கேட்டுச் சொல்லு’ன்னு பி.வாசு கேட்டுள்ளார்.கங்கை அமரன் உடன் பி வாசுவை அழைத்து சென்று பன்னீர் புஷ்பங்கள்’ படத்திற்கு இசை அமைத்ததற்காக இளையராஜாவிடம் சம்பளம் குறித்து பேசியுள்ளார்.

அப்போதும் பி.வாசுவை பார்த்து ‘என்னய்யா சம்பளம் சொல்லணும்?’னு என்று கேட்டுள்ளார், அதற்கு ’இல்லண்ணே, பைனான்ஸ் வாங்கி படம் எடுக்கறோம். டைட்டுதாண்ணே. நீங்க சொல்லுங்கண்ணே’ன்னு சொன்னோம். எங்க பட்ஜெட்டே 5 லட்சம் தான் எனக் கூறியுள்ளார். அதற்கு பி வாசுவை பார்த்து சிரித்த இளையராஜா, “இதுதான்யா முதல் படம், ஃபர்ஸ்ட் இது ஹிட்டாகட்டும், அப்புறம் சேர்ந்து இன்னும் நிறைய படங்கள் பண்ணலாம், அதுவரை சம்பளம் பத்திலாம் யோசிக்க வேண்டாம்” எனக் இளையராஜா தெரிவித்துள்ளார்..

’அண்ணே, என்னண்ணே’ன்னு திரும்பவும் பி.வாசு கேட்க. அதற்கு இளையராஜா ’ஃப்ரீய்யா… பணம் வேணாம். நீங்கதானேய்யா ஸ்ரீதர் சார்கிட்ட நான் வேணும்னு சொல்லி சண்டை போட்டீங்க?’ன்னு இளையராஜா சொன்ன உடனே, எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் ஷாக்காயி நின்றுள்ளார் பி.வாசு. ’முதல் படம்தானே… பண்ணுங்க. ஜெயிச்சிருங்க… அடுத்தாப்ல பாக்கலாம்’னு ’பன்னீர் புஷ்பங்கள்’ படத்துக்கு இசையமைக்க இளையராஜா சம்பளமே வாங்காமல் இசை அமைத்து கொடுத்துள்ளார்.

பி வாசு எவ்வளவோ பேசிப் பார்த்தும் பன்னீர் புஷ்பங்கள் படத்திற்கு சம்பளமே வாங்கவில்லையாம் இளையராஜா.இது குறித்து கண்ணீர் மல்க பகிர்ந்துள்ளார் இயக்குனர் பி.வாசு… இதன் பின்பு பி.வாசு இயக்கத்தில் பன்னீர் புஷ்பங்கள் வெற்றிப் பெற்றதும் தொடர்ந்து பணக்காரன், சின்ன தம்பி, நடிகன், மன்னன், வால்டர் வெற்றிவேல், சேதுபதி ஐபிஎஸ் என படங்கள் பி வாசு – இளையராஜா கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.