இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவுக்கு இளையராஜா அறிமுகம் ஆவதற்கு முன்பே பல சமூக திரைப்படங்களை இயக்கி மிகப்பெரிய உச்சத்தில் இருந்தவர் கே பாலச்சந்தர், அப்போதைய காலகட்டத்தில் நடிகர் நடிகைகளை பெயரை பார்த்து படத்துக்கு வந்த ரசிகர்கள், இயக்குனர் கே பாலச்சந்தர் என்று பெயரைப் பார்த்து திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தனர்.
கே பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்தமான இசையமைப்பாளர் எம் எஸ் வி விசுவநாதன். தொடர்ந்து இடைவிடாமல் எம் எஸ் வி இசையில் படங்களை இயக்கி வந்த கே பாலச்சந்தரிடம், அப்போது பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா உடன் சேர்ந்து படம் பண்ணுங்க என்று பலரும் கோரிக்கை வைக்க, அதற்கு இளையராஜாவின் குணம் அறிந்த கே பாலச்சந்தர் அதெல்லாம் வேண்டாம் என்றும் மேலும் தொடர்ந்து எம் எஸ் வி இசையில் படம் செய்து வருவதால் திடீரென இளையராஜாவிடம் சென்றால் எம்.எஸ்.வி தவறாக நினைத்து விடுவார் என்று மறுத்துவிட்டார்.
ஆனால் ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இளையராஜா உருவெடுத்த பின்பு, அவருக்காகவே ஒரு கதையை எழுதி உருவாக்கிய படம் தான் கே பாலச்சந்தரின் சிந்து பைரவி. இந்த படத்தில் இடம்பெற்று இந்த இளையராஜா இசையைப் பார்த்து பிரமித்து விட்டார் கே பாலச்சந்தர், அதன் பின்பு தொடர்ந்து இளையராஜா இசையில் புது புது அர்த்தங்கள், உன்னால் முடியும் தம்பி என கே பாலச்சந்தருக்கும் இளையராஜாவுக்கும் இடையில் உறவு சுமூகமாக சென்று கொண்டிருந்தது.
இந்த சுழலில், கே பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க கமிட்டாகி இருந்தார் மணிரத்தினம், இந்த படத்தில் இசை அமைக்க இளையராஜாவை சந்தித்து பேச மணிரத்தினத்தை அனுப்பி வைத்துள்ளார் கே பாலச்சந்தர். அங்கே நடத்த டிஸ்கேசனில் மணிரத்தினம் – இளையராஜா இருவருக்கும் இடையில் சிறு சிறு வாக்குவாதமாக தொடங்கி அது மிக பெரிய அளவில் வெடித்துள்ளது.
உடனே டென்ஷனான இளையராஜா பள்ளி மாணவருக்கு ஆசிரியர் பனிஸ்மென்ட் கொடுப்பது போன்று, வெளியே போ என்று சொன்னவர், ஸ்டூடியோ வெளியே இருக்கும் மரத்தடியில் நிற்க சொல்லியுள்ளார் இளையராஜா, ஆனால் அப்போது இளையராஜாவை விட்டால் வேறு ஆள் இல்லையே என்கிற சூழலில், மணிரத்தினமும் ஸ்டுடியோ வெளியில் இருக்கும் மரத்தடியில் நீண்ட நேரமாக நின்றுள்ளார்.
வெளியில் மணிரத்தினம் நிற்பதை இளையராஜாவிடம் தெரிவித்தும், நிற்கட்டும்யா, இப்ப என்ன என்று அலட்சியமாக இருந்துள்ளார் இளையராஜா. இந்நிலையில் மணிரதத்தினம் ஸ்டூடியோ வெளியில் நிற்கும் விஷயம் கே பாலச்சந்தர் கவனத்துக்கு சென்றுள்ளது. உடனே நான் அனுப்பிய ஆள் என்று கூட பார்க்காமல் இளையராஜா இப்படி நடந்து கொண்டது என்னை அவமானப்படுத்துவதற்கு சமம் என டென்ஷனில் ஸ்டூடியோவிற்கு வந்து வெளியில் நின்று கொண்டிருந்த மணிரத்னத்தை காரில் ஏற்றிச்சென்றிருக்கிறார் கே பாலச்சந்தர்.
இதன் பின்பு தான் இளையராஜாவுக்கு போட்டியாக ஒரு இசை அமைப்பாளரை அறிமுகம் செய்ய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்த கே பாலசந்தர் – மணிரத்தினம் இருவரும் கண்ணில் பட்டவர் இளையராஜாவிடம் பணியாற்றிக்கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான், முதல் முதலில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த கே பாலசந்தர் சில டெஸ்ட் வைத்துள்ளார், அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையை பார்த்து பிரமித்து போன கே பாலசந்தர் நீ தான் சரியான ஆள் என முடிவுக்கு வந்துவிட்டார்.
உடனே கே பாலச்சந்தர் கவிதாலயா தயாரிப்பில், மணிரதத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பாளராக அறிமுகமான படம் ரோஜா, முதல் படமே மிக பெரிய ஹிட் அடிக்க அடுத்தடுத்து இயக்குனர்கள் ஏ.ஆர்.ரஹ்மானை நோக்கி படையெடுக்க தொடங்கிய பின்பே இளையராஜாவின் சினிமா ஆதிக்கம் குறைந்தது என்பது குறிப்பிடதக்கது.