இளையராஜா மகள் பவதாரணி பாடிய ஒவ்வொரு பாடலும் மெகா ஹிட் படங்கள், மேலும் பல படங்களுக்கு இசையா அமைப்பாளராகவும் பணியாற்றிய பவதாரணி கடந்த சில வருடங்களாகவே அவருக்கு வயிற்று வலி போன்ற உடல் சார்ந்த சிறுசிறு பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. அதாவது தனக்கு புற்று நோய் உள்ளது, அதனால் தான் இது போன்ற வயிற்று வழி வருகிறது என்பதை கூட தெரியாமல் இருந்த பவதாரணி.
உடல் சார்ந்து அடிக்கடி பிரச்சனை வருகிறதே, அது என்ன பிரச்சனை என்று தீவிரமாக பரிசோதனை செய்யாத பவதாரணி, அப்போதைக்கு இந்த வயிற்று வலி நின்றால் போதும் என, மருத்துவரிடம் அந்தந்த காலகட்டத்தில் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு அப்போதைக்கு சரி செய்து வந்து இருக்கிறார். ஆனால் நாளடைவில் பவதாரணிக்கு புற்று நோய் அவருடைய உடலில் அதிக அளவில் பரவ தொடங்கியுளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பவதாரணிக்கு மிக கடுமையான உடல் பாதிப்பு ஏற்பட்டு. வயிற்று வலியால் துடித்த பவதாரணி ரத்த வாந்தியும் எடுத்துள்ளார். உடனே பவதாரணியை சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற இளையராஜா குடும்பத்தினர். அங்கே முழு பரிசோதனை செய்தனர், அப்போதுதான் அவர்கள் குடும்பத்திற்கே பவதாரணிக்கு புற்றுநோய் உள்ளது என்று தெரியவந்துள்ளது.
ஹீமோதெரபி சிகிச்சை செய்து பவதாரணியை காப்பாற்றி விடலாமா என மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார்கள் இலையராஜா குடுமப்த்தினர், ஆனால் பவதாரணி உடலில் 90 சதவீதம் புற்றுநோய் பரவி விட்டது, புற்று நோய் ஆரம்ப கட்டத்தில் இருந்திருந்தால் ஹீமோதெரபி சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம், தற்பொழுது ஒன்றுமே செய்யமுடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாவதாரணிக்கு புற்று நோய் உள்ளது என்பதே அவருக்கு தெரியக்கூடாது, தெரிந்தால் அவர் ரெம்ப கஷ்டப்படுவார், வாழுகின்ற குறைந்த நாட்களில் அவரை மகிழ்ச்சியாக வாழ வைப்போம் என இளையராஜா குடும்பத்தினர் பாவதாரணிக்கு தெரியாமலே தொடர்ந்து அவருக்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். சகோதரிக்கு புற்றுநோய் இருப்பது தெரிந்ததும் துபாயில் குடும்பத்துடன் செட்டிலாகி இருந்த யுவன் சங்கர் ராஜா சென்னையில் தங்கி சகோதரி பாவதாரணியை பார்த்து கொண்டார்.
சமீபத்தில் கூட பாவதாரணியை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பவதாரணி அமர வைத்து இளையராஜா குடும்பத்தினர் அனைவரும் பவதாரணிக்கு பிடித்த பாடல்களை ஒவ்வொருவராக பாடிய அவரை மகிழ்ச்சி படுத்தியுள்ளனர். பாவதாரணி முன்பு மகிழ்ச்சியாக பாடிய இளையராஜா குடும்பத்தினர், பாவதாரணிக்கு தெரியாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்கள்.
பாவதாரணி இன்னும் சில காலமாவது வாழ வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டு வந்த இளையராஜா குடுமபத்தினருக்கு காலம் கைகொடுக்கவில்லை, இருந்தும் பாவதாரணிக்கு புற்றுநோய் உள்ளதை அவருக்கு தெரியாமலே பார்த்துக்கொண்டு பாவதாரணி மரணம் அடையும் வரை மகிழ்ச்சியாக பார்த்துக்கொண்டார், அதே போன்று தனக்கு புற்றுநோய் உள்ளது என்பதே தெரியாமலே மரணம் அடைந்துவிட்டார் பாவதாரணி.