தமிழக இசையை உலகளவில் பிரசித்தியடைய செய்து, தனது அபரிமிதமான இசைத் திறமையாலும், இசை நுணுக்கத்தாலும் இசையுலகமே அவரை ‘இசைஞானி’ என்று பெயர் சூட்டும் அளவிற்கு உயர்ந்தவர், ‘இசைஞானி’ இளையராஜா அவர்கள். இந்தியாவின் தலைச்சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழும் இவர், இசைத்துறையில் மிகவும் புலமைப் பெற்றவராக விளங்குகிறார்.
1976ல் ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்த அவர், இதுவரை 950க்கும் மேற்பட்ட படங்களில் நான்காயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அவர் மட்டுமல்லாமல், அவரது பிள்ளைகள், சகோதரர்கள், மற்றும் அவர்களுடைய குழந்தைகள் என அவரது குடும்பத்தினர் அனைவரும் இசைத்துறைக்காகத் தங்களையும், தங்களது திறமைகளையும் அற்பணித்தவர்கள்.
இந்தியத் திரைப்படங்களில் மேற்கத்தியப் பாரம்பரிய இசையைப் புகுத்தி, தமிழ் திரைப்படக் கலைஞர்களால் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படும் அவர், இந்திய அரசின் ‘பத்ம பூஷன் விருது’, நான்கு முறை ‘தேசிய விருதையும்’, நான்கு முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதையும்’, மூன்று முறை ‘கேரள அரசின் விருதையும்’, நான்கு முறை ‘நந்தி விருதையும்’, தமிழக அரசின் ‘கலைமாமணி விருதையும்’,
ஆறு முறை ‘தமிழ்நாடு மாநில திரை விருதையும்’, ‘சங்கீத் நாடக அகாடெமி விருது’ எனப் பல்வேறு விருதுகளைப் பெற்று, இசையால் தமிழ் நெஞ்சங்களில் உதிரத்தில் கலந்து, நீங்கா இடம் பிடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. அதுவும் அந்த காலத்தில் மிகப்பெரிய அளவில் ஸ்டுடியோ எதுவும் இல்லாத தருணத்திலேயே சொன்ன நேரத்திற்கு அனைவருக்கும் தரமான இசையை வழங்கி வந்தவர் இசைஞானி இளையராஜா.
இவரிடம் சென்ற இயக்குனர்கள் ஒரே நாளில் ஐந்து பாட்டுகளையும் பெற்றதாகவும் கூறியுள்ளனர். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய இசையாளர்களோ கொடுத்த நேரத்திற்கு பாட்டு கொடுப்பதில்லை. அது மட்டும் இன்றி எனக்கு வெளிநாட்டில் சென்றால் தான் இசை அமைக்கும் முட் செட் ஆகும், இங்கெல்லாம் இருந்து இசை அமைத்தால் பாட்டு வராது , வெளிநாட்டு டிக்கெட் போடுங்கள் என தயாரிப்பாளர்கள் செலவில் வெளிநாடு சென்று இசையமைத்து வருகிறேன் என்கிறார்கள் இன்றைய இசை அமைப்பாளர்கள்.
அதுவும் அவர்கள் தனியாக செல்ல மாட்டார்கள். தங்களுடன் தங்கள் குடும்பத்தையே அழைத்து சென்று தயாரிப்பாளர்களின் பணத்தை கரைத்து விட்டு தான் இங்கு வருகிறார்கள். அதுவும் 7 ஸ்டார் ஹோட்டல்ல தான் தங்குவார்கள். இது போன்ற குற்றச்சாட்டுகள் இன்றைய இசையமைப்பாளர்களான ஜிவி பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் மேல் அதிகமாகவே உள்ளது.
அப்படியே இவர்கள் இசையமைத்தாலும் அந்தப் பாடலானது மூன்று ஐந்து நாட்களிலேயே நமக்கு சலிப்பை உண்டாக்குகிறது. இந்நிலையில் ஒரே நாளில் ஐந்து பாடல்களை கொடுத்தாலும், அதை ஹிட் ஆக்கி உள்ளார் இளையராஜா. மேலும் அவரின் எண்பதுகளில் வந்த பாடல்களை இன்றும் சலிக்காமல் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இசைக்கு மட்டுமே பெரும் தொகையை செலவு செய்து வரும் தயாரிப்பாளர்கள், பலர் இப்ப தான் இளையராஜாவின் அருமை புரிகிறது என புலம்பி வருகிறார்களாம்.