கடந்த 2017ம் ஆண்டு மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான் திரையுலகில் கால் பதித்து 50 வருடம் ஆனதை கொண்டாடும் வகையில் ‘இண்டஸ் எண்டர்டைன்மெண்ட்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து ‘எஸ்.பி.பி – 50’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அந்த இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி பாடக் கூடாது என இசையமைப்பாளர் இளையராஜா எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதனால் இளையராஜாவின் பாடல்களை இனி வரவிருக்கும் இசை நிகழ்ச்சிகளில் பாட இயலாது என எஸ்.பி.பி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். இளையராஜா தனது பாடல்களை காப்புரிமை பெறாமல் வெளியிடவோ, மேடை நிகழ்ச்சிகளில் பாடவோ கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மூலம் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் தடை வாங்கி இருந்தார். இதன் அடிப்படையிலே 2017ம் ஆண்டு இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி பாடக் கூடாது என இசையமைப்பாளர் இளையராஜா எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார் இளையராஜா.

இதே போன்று சுப்பிரமணியபுரம் படத்தில் வரும் ஒரு காட்சியில் சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் என்கிற பாடல் ஒழிக்கும். இளையராஜா இசையில் வெளியான இந்த பாடலை இளையராஜா அனுமதி இல்லாமல் அந்த படத்தில் இடம்பெற செய்ததற்காக இளையராஜா தரப்பில் இருந்து அந்த படத்திற்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.இப்படி காஃபி ரைட் பிரச்சனையில் அடிக்கடி சிக்கி வரும் இளையராஜா, தொடர்ந்து கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார்.
அதே நேரத்தில் இளையராஜா என்ன ஓசியில் மியூசிக் போடுகிறாரா.? காசு வாங்கி கொண்டு தானே மியூசிக் போடுகிறார், அப்படி இருக்கையில் அவர் ஒரு தயாரிப்பாளரிடம் வேலை செய்கிறார், அதனால் காஃபி ரைட்ஸ் வேண்டும் என்றால் கூட அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு தான் உரிமை உண்டு என்கிற விவாதம் கூட சினிமா வட்டாரத்தில் எழுந்தது.
இந்நிலையில் இளையராஜா காஃபி ரைட் பஞ்சாயத்து ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கையில் இசை அமைப்பாளர் தேவா செய்த சம்பவம் தான், இளையராஜாவுக்கு தக்க பாடமாக அமைத்துள்ளது. இசை அமைப்பாளர் தேவா பேட்டி ஒன்றில் பேசுகையில், தன்னுடைய பாடல்களுக்கு தான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் என்று தெரிவித்த தேவா.
மேலும் காப்பி ரைட்ஸ் மூலம் தனக்கு பணம் கிடைக்கும் ஆனால் புகழ் கிடைக்காது என்றும், தன்னுடைய பாடல்களை தற்போது வரை சமீபத்திய படங்களில் பயன்படுத்துவதாகவும் இதன் மூலம் தான் அடுத்தடுத்து ரசிகர்களுடன் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2k கிட்ஸ் வரைக்கும் தன்னை தெரிவதாகவும் பணத்தை விட தனக்கு இது மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ள தேவா.
மேலும், இளம் தலைமுறை வரை தன்னுடைய பாடல்களை ரசிப்பது எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது என தேவா பேசியுள்ளது. தன்னுடைய பாடலுக்கு தொடர்ந்து காப்பி ரைட் கேட்டு பஞ்சாயத்து செய்து சர்ச்சையில் சிக்கி வரும் இளையராஜாவுக்கு படமாக மட்டுமில்லை, தேவா வின் பெருந்தன்மையை பார்த்து இளையராஜா தன்னை தானே மாற்றி கொள்ள வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிட தக்கது.