மாநிலம் விட்டு மாநிலம் சென்று ஏ ஆர் ரகுமானுக்கு இந்த அவமானம் தேவை தானா..

0
Follow on Google News

ஏ.ஆர். ரகுமான் தற்பொழுது சினிமாவில் பாடல் போட்டு சம்பாதிப்பதை விட வெளிநாடுகளில் கச்சேரி நடத்தி சம்பாதிப்பது அதிகம் என்கின்றனர், அந்த வகையில் வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களில் அடிக்கடி இசை கச்சேரியில் பிசியாக இருந்துவரும் ஏ.ஆர். ரகுமான், மகாராஷ்டிரா மாநிலம் பூனே அருகே சமீபத்தில் மிக பிரம்மாண்டமான இசை கச்சேரி நிகழ்ச்சியை நடத்தினார் ஏ.ஆர். ரகுமான்.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட லேசர் கதிர்களுடன் பாடலுக்கு ஏற்ப அந்த மின் விளக்குகள் கலர் கலராக வெளிச்சத்தை கொடுக்கும் வகையில் மிக பிரம்மாண்டமாக அந்த இசை நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள். அந்த இசை நிகழ்ச்சியில் பெரும்பாலும் ஹிந்தி பேசும் ரசிகர்கள் பெரும்பாலும் கலந்து கொண்டு இருந்தாலும், இடையே தமிழ், தெலுங்கு பாடல்களையும் ஏ ஆர் ரகுமான் பாடினார்.

இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த பாடலான தக்க தைய தைய என்கின்ற பாடலை ஏ ஆர் ரகுமான் பாடிக் கொண்டிருக்க, அந்த பாடலுக்கு ஏற்ப மின் விளக்குகள் கலர் கலராக வெளிச்சம் கொடுக்க, ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடிக்கொண்டிருக்கையில், திடீரென மேடையை நோக்கி சென்ற போலீஸ் அதிகாரி மீன்வளக்குகளை அணைக்க சொல்கிறார்,

பின்பு ஏ ஆர் ரகுமானை நோக்கி கையசைத்து பாடலை நிறுத்த சொன்னவுடன் உடனே ஏ.ஆர். ரகுமான் பாடிக்கொண்டிருந்த தக்க தைய தைய பாடலை பாதியில் நிறுத்தியவுடம் சில நேரம் அங்கு சலசலப்பு ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட ஏ ஆர் ரகுமான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி, குறிப்பாக புனே காவல்துறைக்கு நன்றி என்ன தெரிவித்துவிட்டு நிகழ்ச்சியை முடித்தார்.

இந்நிலையில் உலகில் உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்று இந்தியாவே கொண்டாட கூடிய ஒரு இசைக் கலைஞன் மேடையில் பாடல் பாடி கொண்டிருக்கும் பூனே போலீஸ் அதிகாரி. ஒருவர் தனி ஒருவனாக சென்று கையை நீட்டி, ஏ ஆர் ரகுமான் பாடிக்கொண்டிருந்த பாடலை முழுமையாக கூட பாட விடாமல் அந்த இசை நிகழ்ச்சியை நிறுத்த வைத்து. இது ஒரு மாபெரும் இசை கலைஞனான ஏ ஆர் ரகுமானுக்கு ஏற்பட்ட அவமானமாகவே பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் போலீஸ் அதிகாரி எதற்காக திடீரென உள்ளே புகுந்து இசை நிகழ்ச்சியை நிறுத்தினார் என்பது குறித்து விசாரித்ததில், உச்ச நீதிமன்ற விதிகளின்படி ஏ ஆர் ரகுமான் புனேவில் நடத்திய இசை கச்சேரிக்கு இரவு 10 மணி வரை மட்டுமே புனே காவல்துறையினர் அனுமதி தந்துள்ளனர். ஆனால் அனுமதி வழங்கிய நேரத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே புனே காவல் துறையினர் இன்னும் அரை மணி நேரம் தான் உள்ளது என விழா ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அதெல்லாம் ஒன்றுமில்லை இதோ முடிச்சுருவோம் என்று தெரிவித்துள்ளனர், அதே போன்று இரவு பத்து மணி ஆனதும் இதோ நிகழ்ச்சி முடிஞ்சுருச்சு என தெரிவித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர், பல முறை சொல்லியும் போலீசாரை ஒரு பொருட்டாகவே ஏற்று கொள்ளாமல் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில். ஒரு கட்டத்தில் போலீசார் மேடை ஏறி ஏ ஆர் ரகுமான் பாடிக்கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தி அவருடைய கடைமையை செய்ய நேரிட்டது.

அந்த வகையில் கவல்த்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன் தன்னுடைய இசை நிகழ்ச்சியை முடித்திருந்தால் இப்படி ஒரு அவமானம் ஏ ஆர் ரகுமானுக்கு ஏற்பட்டிருக்காது, ஆனால் பலருக்கு முன்னுதாரணமாக இருக்க கூடிய ஏ ஆர் ரகுமானே சட்டத்தை மீறியதால் ஏற்பட்ட அவமானம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.