பல ஹிந்தி படங்களுக்கு இசை அமைத்துள்ள இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திடீரென தமிழ் மீது அதிக பற்று கொண்டு ஹிந்தி எதிர்ப்பு போராளியாக உருவெடுத்துள்ள நிலையில், சமீபத்தில் நடந்து விருது விழாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது, இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான் மனைவி சாயிரா பானுவை மேடைக்கு அழைத்து அவரை ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு தொகுப்பாளர் அழைத்தார்.
மேடையில் பேசுவதற்காக சாயிரா பானு மைக்கை எடுத்ததும், இந்தில பேசாதீங்க; தயவுசெஞ்சு தமிழ்ல பேசுங்க ப்ளீஸ் என மனைவியிடம் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்தார். இதையடுத்து ஆங்கிலத்தில் பேச தொடங்கிய ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாயிரா பானு, எனக்கு சரளமாக தமிழில் பேச முடியாது. அதனால் மன்னித்துக் கொள்ளுங்கள் எனக் தெரிவித்து தனது உரையை முழுவதும் ஆங்கிலத்தில் பேசி முடித்தார்.
இந்நிலையில் கடந்த வருடம் இந்தியாவில் இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார். இது குறித்து கடும் விவாதம் அரசியல் களத்தில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. அப்போது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழணங்கு’ என்ற படத்தை பதிவிட்டார். அதில், ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசனின் வரிகள் இடம் பெற்றிருருந்தன.
மேலும் இது குறித்த கேள்வி என்றிற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ்தான் இணைப்பு மொழி’ என்று பதிலளித்தார். இதற்கு பலரும் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் பற்றை பார் என சில்லறையை சிதற விட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் எனக்கு தமிழ் சரளமாக பேசத் தெரியாது என்று ஏ ஆர் ரகுமான் மனைவி பகிரங்கமாக தெரிவித்து இருந்தது, ஏ ஆர் ரகுமானின் தமிழ் பற்று மிகப் பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.
மனைவி வேறு மொழி சார்ந்தவர் என்பது பெரிய தவறான விஷயம் இல்லை. ஆனால் திருமணம் முடிந்து சுமார் 28 வருடங்கள் ஒரே வீட்டில் ஒன்றாக மனைவியுடன் வசித்து வந்த ஏ ஆர் ரகுமான், தமிழே தெரியாத தன்னுடைய மனைவியிடம் கடந்த 28 வருடங்கள் வீட்டில் தமிழில் பேசி இருந்தால் கூட ஒரு சில வருடங்களிலேயே தமிழ் மொழியை சரளமாக பேச கற்றுக் கொண்டிருப்பார் ஏ ஆர் ரகுமானின் மனைவி.
இதற்கு உதாரணமாக பல நபர்களை சொல்லலாம் நடிகை குஷ்பூ மும்பையைச் சார்ந்தவர் அவருக்கு ஆரம்பத்தில் தமிழ் தெரியாது, ஆனால் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த பின்பு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் தமிழ் மொழியை சரளமாக பேச கற்றுக் கொண்டார். அந்த வகையில் தன் வீட்டிலே இருப்பவர்களுக்கு தமிழை சரளமாக பேச கற்று கொடுக்காத ஏ ஆர் ரகுமானுக்கு எதற்கு தமிழ் பற்று வேஷம் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் ஏ ஆர் ரகுமான் மனைவி திருமணம் முடிந்து 28 வருடங்கள் ஆகியும் இன்னும் சரளமாக தமிழ் பேச வரவில்லை என்றால் அதற்கு காரணம் அவர்கள் வீட்டில் ஹிந்தி, ஆங்கிலம் அல்லது வேறு ஏதாவது ஒரு மொழியில் தான் பேசி இருக்க வேண்டும்.. பாணி பூரி விக்கிறவன் என கிண்டல் செய்யும் வட மாநிலத்தார்கள் பலர் தமிழகத்தில் பிழைப்புக்காக வந்து ஒரு சில வருடங்களிலேயே தமிழை கற்றுக் கொண்டு இங்கே சொந்தமாக தொழில் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளார்கள்.
அப்படி இருக்கையில் தமிழ் தான் எங்கள் மூச்சு என்பது போன்று முழங்கும் ஏ ஆர் ரகுமான் முதலில் தமிழை தன்னுடைய வீட்டில் வளர்க்கட்டும். அந்த வகையில் இது வரை தமிழ் பற்று முகமூடி அணிந்திருந்தார் ஏ.ஆர்.ரகுமான் முகத்திரை விருது வழங்கும் விழாவில் அவர் மனைவி எனக்கு தமிழ் சரளமாக பேச வராது என சொன்ன அடுத்த நிமிடமே கிழிந்து விட்டது என்பது குறிப்பிடதக்கது.