இசைஞானி இளையராஜா தன்னுடைய இசையால் இன்றும் இசையின் பல்கலை கழகம் என்றே சொல்லலாம், 1976ல் தொடங்கிய இவரது இசைப்பயணத்தில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து விட்டார். இன்றைய தலைமுறை வரை இவரது பாட்டை ரசித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிப் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் பயிற்சி பெற்றவர். இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் இசையுலகில் மிகப்பெரிய சென்சேஷனல், ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், அவருடைய இசை பயணத்தை ஆரம்பித்ததே இளையராஜாவின் இசைக்குழுவில் பியானோ வாசிப்பவராக தான். ரோஜா படத்திற்கு முன்பு ஏ ஆர் ரகுமான், இளையராஜா இசையில் 500 பாடல்களுக்கு மேல் பணியாற்றியிருக்கிறார்.
ஆஸ்கார் வெல்லும் அளவுக்கு உயர்ந்து இருக்கும் ரஹ்மானுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.அதனை போல மிக முக்கியமான படங்களை இப்போது செய்து வருகிறார் இவர்.
தற்போது மாமன்னன் படம் வந்ததிலிருந்து சினிமாவில் ஜாதி பற்றிய பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் மாரி செல்வராஜ் படத்தின் மூலமா தான் ஜாதியே தோன்றியது என்ற அளவிற்கு பேசி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான், பேசுகையில், “கிராமப்புறங்களில் இன்றும் ஜாதி உள்ளது. நான் மேலே நீ கீழே என்று பார்க்கின்றனர். ஆனால் ஒரு ஆள் பெரிய ஆளாகி வெற்றி பெறும் பொழுது அவர்களின் ஜாதி மதம் மறைகிறது. எனவே ஒரு ஆள் முன்னேற வேண்டும். முன்னேறுவதற்கு ஒரு சில சமயம் ஒரு வருடம் ஆகலாம் சிலருக்கு இரண்டு வருடம் ஆகலாம் சிலருக்கு 20 வருடங்கள் ஆகலாம்.
ஆனால் இருக்கும் எல்லோரிடமும் ஒரு வெற்றி வீரன் இருக்கிறான். அதனை வெளிக்கொண்டு வரவேண்டும். இதற்கு இளையராஜா சார் பெரிய எடுத்துக்காட்டு. அவர் எங்கே இருந்தோ வந்து இன்று பெரிய ஆளாகி இருக்கிறார். வி சல்யூட் கிம்” என்று கூறியுள்ளார். மேலும் இசைஞானி இளையராஜை பற்றி மற்றொரு தகவலையும் இவர் சொல்லியுள்ளார்.
அதன்படி இசை கலைஞன் என்றால் தண்ணி அடிப்பான்,drugs அடிப்பான்,பெண்களுடன் சுற்றி கொண்டிருப்பான் என ஒரு பார்வையை சிலர் உருவாக்கிவிட்டார்கள். இளையராஜா தான் அதை உடைத்தவர் அது அனைவருக்குமே ஒரு பாடமாக தான் அமைந்தது. அவர் சாமியார் போல தான் இருப்பார்..தண்ணி அடிக்க மாட்டார், தம் அடிக்க மாட்டார், வேற எந்த கெட்ட பழக்கம் எதுவுமே இருக்காது. அவரை பார்த்தாலே நடுங்குவாங்க..
அவரது கேரக்டர்னால தான் நடுங்குவாங்க. அவர் தான் எனக்கு inspiration என ரஹ்மான் கூறி இருக்கிறார்.
இந்நிலையில் மாமன்னன் படத்தின் 50 வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர்கள் வடிவேலு, உதயநிதி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பேசுகையில்,
“எல்லா புகழும் இறைவனுக்கே.. இந்த படத்தின் கதை எனக்குள் 30 வருடமாக இருந்த ஆதங்கம். இசையில் அதை என்னால் பண்ண முடியவில்லை. எனவே, அதை படமாக பண்ண முடிந்தவருடன் சேர்ந்து இசை அமைத்தேன். மாரி செல்வராஜ் கதை சொல்லும் போது இவ்வளவு நன்றாக வரும் என எனக்கு தெரியாது. அதற்கு முக்கிய காரணம் வடிவேலு சார்.
வடிவேலு சார் உதயநிதிக்கு பின்னால் பைக்கில் செல்லும் அந்த காட்சியை பார்த்தேன். மிகவும் சோகமாக கிட்டதட்ட அழுகின்ற நிலையில் அவர் செல்வார். அந்த காட்சி எனை மிகவும் பாதித்தது. அதனால் முழுமையாக இந்த கதையை எடுத்து செய்தேன்” என்று நெகிழ்ச்சியாக கூறினார்.