கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு இந்தியாவில் இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார். இது குறித்து கடும் விவாதம் அரசியல் களத்தில் பரபரப்பாக நடைபெற்று வந் நிலையில். அப்போது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழணங்கு’ என்ற படத்தை பதிவிட்டார். அதில், ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசனின் வரிகள் இடம் பெற்றிருருந்தன.
மேலும் இது குறித்த கேள்வி என்றிற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ்தான் இணைப்பு மொழி’ என்று பதிலளித்தார். இதற்கு பலரும் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் பற்றை பார் என சில்லறையை சிதற விட்டனர். மேலும் சிலர் இந்தியை எதிர்க்கு தமிழின போராளி ஏ.ஆர்.ரகுமான் என்றெல்லால் முட்டு கொடுத்து வந்தனர். இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் பிரம்மாண்டமாக தற்பொழுது தொடங்கியுள்ளது
கடந்த ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றதன் அடிப்படையில் முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின, சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுவதால், பெரும்பாலும் தமிழ் ரசிகர்கள் அதிகளவில் ஸ்டேடியம் முழுவதும் நிரம்பி இருந்தனர். இந்த தொடங்க விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடை பெற இருப்பது மேலும் தமிழ் ரசிகர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி, அரங்கம் முழுவதும் தமிழ் ரசிகர்கள், அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி முழுக்க முழுக்க தமிழ் பாடல்கள் ஒலிக்க இருக்கிறது என செம்ம என்ஜாய் மூடில் மிக பெரிய எதிர்ப்பரப்பில் இருந்த தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் வகையில் நடந்து கொண்டார் ஏ.ஆர்.ரகுமான்.இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் ஆறு இந்தி பாடலையும் மூன்றே மூன்று தமிழ் பாடலை பாட்டுமே பாடியதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
தமிழ் பாடலை கேட்க ஆர்வமாக வந்த ரசிகர்கள், இந்தி பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் பாடியது, இந்தி மொழி தெரியாத தமிழக ரசிகர்கள் மத்தியில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது போன்று உள்ளது என்று கடும் வேதனையுடன், மொழியே தெரியாமல் தலையை சொரிந்து கொண்டு, இவரை தமிழின போராளி, இந்தி எதிர்ப்பு போராளினு சில்லறை சிதற விட்ட நமக்கே விபூதி அடித்து விட்டாரே என தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் புலம்பியதை பார்க்க முடிந்தது.
இதே போன்று கடந்த வருடம் நடந்து விருது விழாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது, இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான் மனைவி சாயிரா பானுவை மேடைக்கு அழைத்து அவரை ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு தொகுப்பாளர் அழைத்தார்.மேடையில் பேசுவதற்காக சாயிரா பானு மைக்கை எடுத்ததும், இந்தில பேசாதீங்க; தயவுசெஞ்சு தமிழ்ல பேசுங்க ப்ளீஸ் என மனைவியிடம் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்தார்.
இதையடுத்து ஆங்கிலத்தில் பேச தொடங்கிய ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாயிரா பானு, எனக்கு சரளமாக தமிழில் பேச முடியாது. அதனால் மன்னித்துக் கொள்ளுங்கள் எனக் தெரிவித்து தனது உரையை முழுவதும் ஆங்கிலத்தில் பேசி முடித்தார்.இந்த நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் எனக்கு தமிழ் சரளமாக பேசத் தெரியாது என்று ஏ ஆர் ரகுமான் மனைவி பகிரங்கமாக தெரிவித்து இருந்தது, அப்போதே ஏ ஆர் ரகுமானின் தமிழ் பற்று மிகப் பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.
அதாவது மனைவி வேறு மொழி சார்ந்தவர் என்பது பெரிய தவறான விஷயம் இல்லை. ஆனால் திருமணம் முடிந்து சுமார் 28 வருடங்கள் ஒரே வீட்டில் ஒன்றாக மனைவியுடன் வசித்து வந்த ஏ ஆர் ரகுமான், தமிழே தெரியாத தன்னுடைய மனைவியிடம் கடந்த 28 வருடங்கள் வீட்டில் தமிழில் பேசி இருந்தால் கூட ஒரு சில வருடங்களிலேயே தமிழ் மொழியை சரளமாக பேச கற்றுக் கொண்டிருப்பார் ஏ ஆர் ரகுமானின் மனைவி அப்போதே பலரும் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் பற்று பற்றி கேள்வி எழுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.