இளம் வயதில் மிக குறுகிய காலத்தில் சினிமாவில் மிக பெரிய உயரத்தை தொட்டவர் இசையமைப்பாளர் அனிருத். இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம் 3 படுதோல்வியை அடைந்தாலும், அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. முதல் படத்திலே ஒய் திஸ் கொலை வெறி பாடல் மூலம் உலக புகழ் பெற்றார் அனிருத். அடுத்த குறுகிய காலத்தில் ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார் அனிருத்.
அதே போன்று தொடர்ந்து எதாவது ஒரு சர்ச்சையில் அனிருத் சிக்கி வருகின்றவர். நடிகை ஆண்ட்ரியா உடன் தனிமையில் நெருக்கமாக அனிருத் இருக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் காதலித்ததாகவும், ஆண்ட்ரியாவை விட அனிருத்துக்கு வயது குறைவு என்பதால் இந்த காதல் தோல்வியை தழுவியதாக கூறப்பட்டது. மேலும் நடிகர் சிம்பு உடன் இணைந்து பீப் சாங் வெளியிட்டு மிக பெரிய சிக்கலில் சிக்கினார் அனிரூத்.
பெரும்பாலும் இசையமைப்பாளர்கள் காதல் கிசு கிசுவில் சிக்க மாட்டார்கள், படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்கள் உடன் நல்ல உறவுகளை தொடரும் இசையமைப்பாளர்கள். நடிகைகளுடன் நெருக்கம் காட்டுவது கிடையாது, ஆனால், இதில் அனிரூத் சற்று மாறுபட்டவர். நடிகைகளுடன் நெருங்கி பழக கூடியவர் அனிருத், மேலும் சினிமா நடிகைகளுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொள்வது, அவர்களுடன் ஊர் சுற்றுவது என அனிருத் தனுஷ் பாணியில் நடிகைகளுடன் நெருக்கமாக இருக்க கூடியவர்.
இந்நிலையில் தற்பொழுது சினிமா வட்டாரத்தில் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவர் பற்றிய பேச்சு தான் பரபரப்பாக உள்ளது. சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கமாக இருக்கும் அனிருத், அடிக்கடி இருவரும் ஒன்றாக இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. மேலும் இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் இவர்கள் மிக நெருக்கமாக செம்ம லூட்டி அடிப்பதாகவும், மேலும் பார்ட்டி முடிந்த பின்பு இருவரும் ஒன்றாக புறப்பட்டு செல்வதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அனிருத் – கீர்த்தி சுரேஷ் இருவரும் அடிக்கடி ஒன்றாக சுற்றி வருவது, இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில். அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து இது குறித்து எந்த ஒரு பதிலும் இல்லை. இந்நிலையில் இவர்கள் இருவரும் நண்பர்களாக தான் பழகி வருகிறார்கள். இவர்களுக்குக்குள் நெருக்கிய நட்பு மட்டுமே என்றும். மேலும் இவர்கள் காதலர்கள் கிடையாது என்றும் கூறப்படுகிறது.