ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கு பெரிய பஞ்சம் நிலவி வந்தது. ஆனால் தற்போது தடுக்கி விழுந்தால் 100 இசையமைப்பாளர்கள் என்ற நிலை உருவாகி உள்ளது. இப்படி கடும் போட்டி இருந்தாலும் கூட, இன்றைய காலகட்டத்தில் 10 படங்கள் ரிலீசானால் அதில் எட்டு படங்களில் இவர்தான் தன் கொடியை பறக்க விடுகிறார். ஆம் இப்பொழுது வரக்கூடிய படங்களில் 95 சதவீதம் படங்களுக்கு அனிருத் தான் இசையமைக்கிறார்.
அந்த அளவிற்கு சினிமாவில் மிக பெரிய உச்சத்தில் இருக்கும் அனிருத்துக்கு வயது 31 தான். தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்திலேயே வெரைட்டியான இசையை கொடுத்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்தார். முக்கியமாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ட்ரெண்டானதை தொடர்ந்து அடுத்த பல வருடங்களுக்கு அனிருத்தின் ஆட்சிதான் கோலிவுட்டில் நடக்கப்போவதாக அப்போதே கணிக்கப்பட்டார் அநிருத்.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக அனிருத்துக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அவர் இசையமைத்த அத்தனை படங்களின் பாடல்களும் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. 90களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வந்தபோது எந்த மாதிரியான அதிர்வை தமிழ் சினிமா கண்டதோ அதேபோல் அனிருத் வருகையின்போதும் இருந்தது.
ஒருகட்டத்தில் அனிருத் இசை இல்லாமல் படங்கள் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. விஜய், ரஜினி , அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களே அனிருத்தின் இசை இருந்தால் தங்கள் படத்துக்கு வலு சேர்க்கும் என்கிற முடிவுக்கு வந்து விட்டதால், தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உருவெடுத்து விட்டார் அனிருத்.இந்நிலையில் தற்போது ஜெயிலர் படம் ஹிட்டானதற்கு அனிருத் இசை முக்கிய பங்காற்றியுள்ளது.
அது மட்டும் இன்றி தற்போது அனிருத் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். குறிப்பாக அதில் விஜய் நடிக்கும் லியோ, அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படம், கமல் நடித்திருக்கும் இந்தியன் 2, விஜய் தேவர் கொண்டாவின் 12 வது படம், ரஜினி நடிக்க இருக்கும் தலைவர்170 படம், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவாரப் படம் மற்றும் கவின் நடிக்க இருக்கும் படம் என வரிசையாக தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் ரவுண்டு கட்டி அடித்துவருகிறார் அனிருத்.
கோலிவுட் டோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் எண்ட்ரி ஆகியிருக்கிறார் அனிருத். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான நடித்திருக்கும் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அட்லீயின் மேக்கிங் ஒருபக்கம் தீயாக இருக்க அனிருத்தின் இசை படத்தை வேறு எங்கோ கொண்டு போய்விடும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.மேலும் பாலிவுட்டிலும் அனிருத் ஆட்சி தொடங்கப்போகிறது என்பது ஜவான் படத்தின் ட்ரைலரே சாட்சி.
இவருடைய இந்த வளர்ச்சி, டாப் இசை அமைப்பாளர்களான ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் போன்றோர்களை ஓரம் கட்டி வருகிறது என்றும் கூறலாம். காரணம் சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான ஓன்று இரண்டு படங்களை தவிர வேறு எதும் பெரிதாக சொல்லும்படியாக அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமானிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என அனிருத்துக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
மேலும், அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் லிஸ்ட்டில் ஏ.ஆர்.ரஹ்மானை அனிருத் முந்திவிட்டார் என புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு படத்துக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் ஆனால் அனிருத்தோ ஜவான் படத்துக்காக 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், ஏ .ஆர் ரகுமான் இசைமைப்பாளராக என்ட்ரி கொடுத்த காலகட்டத்தில் இளையராஜாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு போன்று, அநிருத்தின் ஆசூர வளர்ச்சி ரகுமானின் இசைக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருவது குறிப்பிடதக்கது.