அனிருத் ரெம்ப நாளைக்கு ஓட்ட முடியாதாம்… ஜேம்ஸ் வசந்தன் சொன்ன பகீர் தகவல்…

0
Follow on Google News

தொடர்ந்து இளையராஜா மீது வன்மத்தை கக்கி பல்வேறு சர்ச்சையில் சிக்கி கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி வருகின்றவர் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். பெரிதாக சினிமாவில் ஜொலிக்கவில்லை அதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வரக்கூடிய ஜேம்ஸ் வசந்தன் கடத்த சில வருடங்களாகவே தொடர்ந்து இளையராஜாவை சீண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி வருகின்றவர்,

அந்த வகையில் SPB மரணத்தின் போது கூட இளையராஜாவை விமர்சனம் செய்த ஜேம்ஸ் வசந்தன் சமீபத்திய பேட்டி ஒன்றில் இளையராஜாவை ஒருமையில் பேசிஇருந்தார், தற்பொழுது அவர் இசை மீதும் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார். இந்திய சினிமாவே கொண்டாட கூடிய நபராக திகழ்ந்து வரக்கூடியவர் இசைஞானி இளையராஜா, அவர் மீது மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் கூட அவருடை இசை மீது இதுவரை யாரும் விமர்சனம் வைத்ததில்லை.

ஆனால் இளையராஜா தமிழ் மொழிக்கு இரண்டகம் செய்துவிட்டார் என இளையராஜா இசையில் வெளியான ஒரு பாடலில் உள்ள ஒரு எழுத்தை வைத்து இளையராஜாவை சீண்டும் வகையில் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளது, மொழிக்கே இளையராஜா இரண்டகம் செய்துவிட்டார் என்றெல்லாம் ஜேம்ஸ் வசந்தன் பேசி கடும் எதிர்ப்புக்கு உள்ளானார்.

இந்தநிலையில் இளையராஜா மீது மட்டும் வன்மத்தை கக்கி வந்த ஜேம்ஸ் வசந்தன் தற்பொழுது இசை அமைப்பாளர் அனிருத் மீதும் வன்மத்தை கக்க தொடங்கியுள்ளார், பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இமான் பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜேம்ஸ் வசந்தன். இமான் சிறந்த இசையமைப்பாளர், அவருக்கு பலமாக இருக்க கூடியது அவருடைய மெலடி இசை அதை தொடர்ந்து செய்து வருகிறார் இமான்.

மேலும் இமான் ரசிகர்களுக்கு தேவையான அனைத்து விதமான இசையையும் விருந்தாக கொடுத்து வரக்கூடியவர் இமான். ஆனால் அனிருத் அப்படி அல்ல அவருடைய இசை முழுவதும் அதிரடி இசையாக உள்ளது. வேறு இசைகளில் அவர் அதிகம் கவனம் செலுத்தவில்லை ரசிகர்களை கவர்வதே அவருடைய முக்கிய நோக்கமாக உள்ளது.

குத்து பாட்டுகளுக்கு மட்டுமே அனிருத் இசை சரியாக வரும். இதை வைத்து கொண்டு எத்தனை நாட்கள் தான் ஓட்ட முடியும் என்றும், மேலும் பிரியாணியை ஒரு முறை சாப்பிட்டால் நல்லா இருக்கும் தொடர்ந்து அதையே சாப்பிட்டால் என்னவாகும் ? அதுபோல ரசிகர்கள் ராக் மியூசிக் மட்டும் விரும்புவதால் தொடர்ந்து அதையே கொடுத்து வருகிறார் அனிருத்.

இதற்கு தயாரிப்பாளரும் இயக்குனரும் தலை சாய்ப்பதால், இதை அநிருத் அவருக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனக்கு எது வருகிறதோ அதை மட்டுமே வெளிகாட்டடி வருகிறார் என தெரிவித்த ஜேம்ஸ் வசந்தன் ஒரு இசையமைப்பாளருக்கு இது அழகு அல்ல என்றும் இசையமைப்பாளர் என்பவர் ஒரு படத்தின் கதைக்கு என்ன தேவையோ? அதை அந்த கதைக்கு ஏற்றவாறு அந்த இடத்திற்கு ஏற்றவாறு அமைத்து கொடுக்க வேண்டும்.

ராக் மியூசிக் மட்டும் படத்தின் சிறந்த இசையாகி விட முடியாது , அந்த படத்திற்கு தேவையான மெலடி, குத்துப்பாட்டு பிஜிஎம் மற்றும் பல விஷயங்கள் அதில் இருந்தால் தான் அந்த இசை சிறந்த இசையாக அறியப்படும் என இன்று மிக பெரிய உச்சத்தில் இருக்கும் அநிருத் இசை மீது குறை கூறியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன். இதற்கு இசை ரசிகர்கள், நானும் இசை அமைப்பாளர் என சில படங்களுக்கு இசை அமைத்த ஜேம்ஸ் வசந்தனுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. அதனால் உச்சத்தில் இருக்கும் இசை அமைப்பாளர்கள் மீது உள்ள வெறுப்பு தான் தொடர்ந்து இப்படி ஜேம்ஸ் வசந்தன் வன்மத்தை கக்கி வருவதர்க்கு காரணம் என்கின்றனர் இசை ரசிகர்கள்.